இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு!
டெல்லி: இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஜனவரி 2026-இல் ரஷ்யாவிலிருந்து 1.98 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 44 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு.

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்துக்குப் பின்னர், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்த இந்தியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் எண்ணெய் வாங்குவதை அதிகரித்தது. ஜனவரி 2026-இல் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 16.6% ஈராக்கிலிருந்து வந்தது. சவுதி அரேபியாவின் இந்திய எண்ணெய் இறக்குமதி பங்கு ஜனவரி 2026-இல் 17.5% ஆக உயர்ந்தது.
இந்நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், இந்த அனைத்து வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய ஈரானுடனான மோதலுக்குப் பிறகு வளைகுடா மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி தற்போது ஆபத்தில் உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 8% அதிகரித்து, மார்ச் 2-ஆம் தேதி ஒரு பீப்பாய்க்கு 80 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி, ஓமான் வளைகுடா வழியாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெயை அனுப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ரஷ்யா இவ்வாறு அறிவித்துள்ளது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications