‛‛ஆபாசம்’’.. நீ எப்படி இருக்க தெரியுமா? ரஷ்ய பெண் யூடியூபரிடம் அத்துமீறிய இளைஞர்.. டெல்லியில் ஷாக்
டெல்லி: டெல்லியில் இரவு நேரத்தில் ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் யூடியூப்பாளருக்கு இளைஞர் ஒருவர் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருகின்றனர். இதில் பலரும் இந்தியாவில் சுற்றிப்பார்க்கும் இடங்களை வீடியோவாக எடுத்து தங்களின் யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி இந்தியா வரும் இளம்பெண்களிடம் சிலர் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ‛KoKo In India' என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் தற்போது இந்தியாவில் வசித்து வருகிறார். இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு அவர் சென்று பார்வையிட்டு அந்த இடங்கள் குறித்த வீடியோவை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் இவர் டெல்லி சரோஜினி நகரில் உள்ள மார்க்கெட்டுக்கு இரவில் சென்றார்.
அங்கு அவர் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். இந்த வேளையில் இளைஞர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து சென்றார். அதன்பிறகு அவர் ரஷ்யாவின் இளம்பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்தார். அப்போது அவர், ‛‛நாம் இருவரும் நண்பர்களாகலாமா?'' என கேட்டார். அதற்கு அந்த பெண் இந்தியில், ‛‛நீங்கள் யார் என்று எனக்கு தெரியாதே'' என கூறினார்.
இதையடுத்து அந்த இளைஞர், ‛‛இருவரும் நண்பர்களான பிறகு ஒருவரையொருவர் பற்றி தெரிந்து கொள்வோம்'' என கூறினார். இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்தார். அதன்பிறகும் விடாத அந்த இளைஞர், ‛You are very sexy'' என தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் செய்வதறியது அங்கிருந்து சென்றார். இந்த வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் தான் இளைஞரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் தற்போது வரை அந்த இளம்பெண் சார்பில் போலசில் புகார் அளிக்கப்படவில்லை. இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கு, இளைஞர் கொடுத்த தொல்லை தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications