நள்ளிரவில் ஜெய்சங்கருக்கு போன் போட்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்! இந்தியா கொடுத்த வாக்குறுதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இந்த உரையாடல் மூலம், ஈரானுக்கு இந்தியா நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் சரமாரியாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இப்படி இருக்கையில் இந்தியாவிடம் ஈரான் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

S Jaishankar

இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், இரு தரப்பு உரையாடல் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதில், "ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் நாட்டில் நிலவும் சூழல் குறித்து, இந்திய வெளியுறவுத்துறையுடன் தகவல்களை பகிர்ந்துக்கொண்டார். இந்த உரையாடலின்போது இஸ்லாமிய குடிரயரசு ஈரானின் நிலைப்பாட்டை அவர் தெளிவாக எடுத்துரைத்தார். அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியதும், கடற்படை முற்றுகை மற்றும் வணிக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் குறித்தும் விளக்கினார்.

மேலும், தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புகள்தான் ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை, சர்வதேச சமூகத்தின் முன் இந்த தவறை உணர வைப்பதில் மற்ற நாடுகளுக்கு இருக்கும் பொறுப்புணர்வையும் விளக்கினார்.

அதேபோல ஈரானில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் இதனால் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவலை தெரிவித்தார். மட்டுமல்லாது பதற்றத்தை தனிக்க இந்திய உதவ தயாராக இருப்பதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது ஈரான் மீது அமெரிக்கா.. உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் நியாயத்தின் பக்கம் இந்தியா நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+