தாலிபான் வந்தால்தான் நாங்களும் வருவோம்.. அடம்பிடித்த பாகிஸ்தான்.. மொத்தமாக ரத்தான சார்க் மாநாடு!
டெல்லி: தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு கூட்டமான சார்க் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை நடக்க வேண்டிய கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Recommended Video
பொதுவாக சார்க் மாநாடு ஐநா மாநாட்டை தொடர்ந்து நடப்பது வழக்கம். இந்த நிலையில் செப்டம்பர் 25ம் தேதி நியூயார்க்கில் ஐநா அவையில் சார்க் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. சார்க் என்பது தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும்.
வங்கதேசத்தில் 1995ல் உருவாக்கப்பட்ட இந்த வலிமையான கூட்டமைப்பில் இந்திய, வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. இதில் சமீபத்தில் 2007ல்தான் ஆப்கானிஸ்தான் சேர்க்கப்பட்டது. அங்கு அமெரிக்க படைகளின் கட்டுப்பாடும், தொடர்ந்து நிலையான அரசும் இருந்த காரணத்தால் ஆப்கானிஸ்தான் இந்த குழுவில் சேர்க்கப்பட்டது.

மீட்டிங் ரத்து
இந்த நிலையில் சனிக்கிழமை நடக்க வேண்டிய இந்த மீட்டிங் ரத்து செய்யப்பட்டு உள்ளது. உறுப்பு நாடுகள் ஒரே மாதிரியான கருத்து கொண்டு இருக்கவில்லை. மாநாடு குறித்து ஒரே மாதிரியான முடிவு எடுக்கப்படவில்லை என்பதால் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாநாட்டை நேபாளம் நடத்துவதாக இருந்தது. ஆனால் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான்
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது அவரின் பிரதிநிதி கலந்து கொள்வார். இதில் ஆப்கானிஸ்தான் சார்பாக யார் கலந்து கொள்வது என்ற குழப்பம் நிலவியது. முதலில் ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளாமலே மீட்டிங் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு தொடக்கத்தில் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அதன்பின் பாகிஸ்தான் நிலைப்பாட்டை மாற்றி உள்ளது.

தாலிபான்
தாலிபான் அரசின் பிரதிநிதிகளை இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாங்களும் மீட்டிங்கில் கலந்து கொள்வோம். இதில் ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசின் கீழ் இருந்த பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள கூடாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதை மற்ற நாடுகள் எதிர்த்த போதும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

பாகிஸ்தான் நிலைப்பாடு
பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை மற்ற சார்க் நாடுகள் ஒருமனதாக எதிர்த்து உள்ளது. பாகிஸ்தானும் தாலிபான் வந்தால்தான் நாங்கள் கூட்டத்திற்கு வருவோம் என்று உறுதியாக கூறி இருக்கிறது. இதில் ஒருங்கிணைந்த முடிவு எடுக்கப்படவில்லை என்பதால் கடைசியில் மொத்தமாக சார்க் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. தாலிபான்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்ற காரணத்தால் பல்வேறு நாடுகள் பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை நிராகரித்து உள்ளன.

இந்தியா
முக்கியமாக இந்தியா ஆப்கானிஸ்தான் அரசை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில் நடந்த ஷாங்காய் கோஆப்பரேஷன் மீட்டிங்கில் கூட பிரதமர் மோடி, தாலிபான் அரசு பெண்கள், மைனாரிட்டிகளுக்கு எதிராக இருப்பதாக பேசி இருந்தார். எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் அரசாக இந்த அரசு இல்லை என்று ஆப்கானிஸ்தானை பிரதமர் மோடி விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில் இந்தியாவும் தாலிபான்கள் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதை விரும்பவில்லை.

ஐநா
அதோடு ஐநா கட்டிடத்தில் இந்த மீட்டிங் நடக்க இருந்தது. ஐநாவால் தடை செய்யப்பட்ட பலரைத்தான் ஆப்கானிஸ்தான் அரசு இடைக்கால அமைச்சர்களாக நியமித்து உள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை இடைக்கால அமைச்சர் அமீர் கான் முட்டாகியும் கூட ஐநாவால் தடை செய்யப்பட்ட நபர். அப்படி இருக்கும் போது வரை ஐநா வளாகத்திற்கு அழைத்து வந்து எப்படி மீட்டிங் நடத்த முடியும் என்பதால் இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications