என்னாது இந்தியாவா? நேருவே பெரிய பலாத்கார குற்றவாளிதான்.. சாத்வி பிராச்சி கடும் விமர்சனம்
டெல்லி: நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவே மிகப் பெரிய பலாத்கார குற்றங்களை புரிபவர்தான் என சாமியாரும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இதற்கு அண்மையில் நடந்த உன்னவ் பெண் பலாத்காரம், தெலுங்கானா பெண் மருத்துவர் பலாத்காரம் ஆகியவையே எடுத்துக்காட்டாகும். இரு சம்பவங்களும் நாட்டையே உலுக்கின.

சுட்டுக் கொல்ல வேண்டும்
இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பலாத்கார சம்பவங்களில் ஈடுபடுவோரை கோர்ட், கேஸ் என அழைத்து செல்லாமல் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மற்ற நாடுகள்
இந்த நிலையில் சனிக்கிழமை ராகுல்காந்தி வயநாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில் உலகிலேயே இந்தியா அதிக பலாத்கார சம்பவங்களுக்கு பெயர் பெற்றுவிட்டது. இதை பார்த்து விட்டு தங்கள் மகள்களையும் சகோதரிகளையும் இந்தியாவால் பாதுகாக்க முடியாதது ஏன் என மற்ற நாடுகள் கேள்வி எழுப்புகின்றன.

விமர்சனங்கள்
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த ஒரு எம்எல்ஏ பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளார். அது குறித்து பிரதமர் எவ்வித கருத்தையும் கூறவில்லை என்றார். இதற்கு சாமியார் சாத்வி பிராச்சி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்து
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில் இந்தியா ராமர், கிருஷ்ணர்களின் நாடு. ஜவஹர்லால் நேருவே மிகப் பெரிய பலாத்கார சம்பவங்களில் ஈடுபட்டவர். இதற்கு ராகுல்காந்தி என்ன சொல்வார்? நம் நாட்டின் ராமர், கிருஷ்ணர் கலாசாரங்களை கெடுத்துவிட்டார் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். சாத்வி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications