பாதுகாப்பான நாடுகள் லிஸ்ட்.. அமெரிக்கா, பிரிட்டனை விட சிறந்த நிலையில் இந்தியா! அப்போ முதலிடம் யார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை நம்பெரோ என்ற தளம் வெளியிட்டுள்ளது. அதில் 2025ம் ஆண்டுக்கான பட்டியலில் ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் நல்ல இடத்தை பிடித்துள்ளது. இதில் இந்தியா 66ஆவது இடத்தை பிடித்துள்ள போதிலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட வல்லரசு நாடுகளைக் காட்டிலும் இந்தியா நல்ல இடத்திலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பெரோ என்ற தளம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடும். அதன்படி 2025ம் ஆண்டுக்கான பாதுகாப்பான நாடுகள் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் ஏற்படும் கிரிமினல் சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லிஸ்டில் மொத்தம் 146 நாடுகள் இடம்பெற்றுள்ளது.

India offbeat

யார் முதலிடம்

இதில் 2025ம் ஆண்டுக்கான பட்டியலில் உலகின் சிறிய நாடுகளில் ஒன்றான அன்டோரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அன்டோரா என்பது ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகையே வெறும் 80,856 தான். பாதுகாப்பு குறியீட்டில் 84.7 மார்க் உடன் அன்டோரா பாதுகாப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

டாப் 10 இடங்கள்

அடுத்த இரு இடங்களில் மத்திய கிழக்கு நாடுகள் இடம் பிடித்துள்ளது. ஐக்கிய அமீரகம் 84.5 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், கத்தார் 84.2 மதிப்பெண்களுடன் கத்தார் 3வது இடத்தை பிடித்துள்ளார். இதில் தைவான் 84.2 மதிப்பெண்களுடன் 4வது இடத்திலும் மத்திய கிழக்கின் ஓமன் 81.7 மதிப்பெண்களுடன் 5வது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து ஐல் ஆஃப் மேன் (79.0 மதிப்பெண்கள்), ஹாங்காங் (78.5 மதிப்பெண்கள்), ஆர்மீனியா (77.9 மதிப்பெண்கள்), சிங்கப்பூர் (77.4 மதிப்பெண்கள்), ஜப்பான் (77.1 மதிப்பெண்கள்) ஆகிய நாடுகள் 6 முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.

கடைசி 10 எந்த நாடுகள்

இந்த பட்டியலில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா கடைசி இடத்தில் இருக்கிறது. சுமார் 3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட வெனிசுலா வெறும் 19.3 மார்க் மட்டுமே பெற்று 147வது இடத்தை பிடித்துள்ளது. 19.7 மார்க் உடன் பப்புவா நியூ கினியா 146 மார்க் பெற்றுள்ளது. ஹதி 21.1 மார்க் உடன் 145ஆவது இடத்தை பிடித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் 24.9 மதிப்பெண் உடன் 144ஆவது இடத்திலும் 25.3 மார்க் உடன் தென்னாப்பிரிக்கா 143வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்தியா எங்கே

இந்த பட்டியலில் இந்தியா 66ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா 55.7 மார்க் பெற்று இருக்கிறது. அண்டை நாடுகளைப் பொறுத்தவரைப் பாகிஸ்தான் 56.3 மார்க் உடன் 65வது இடத்தை பிடித்துள்ளது. 57.9 மார்க் உடன் இலங்கை 29வது இடத்தை பிடித்துள்ள நிலையில், 76 மார்க் உடன் சீனா 15வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் மற்ற அண்டை நாடுகளான நேபாளம் (47வது இடம்), வங்கதேசம் (126வது இடம்), மியான்மர் (96வது இடம்) பிடித்துள்ளது.

இதில் விஷயம் என்னவென்றால் இந்த பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை காட்டிலும் இந்தியா அதிக மார்க் பெற்றுள்ளது. அமெரிக்கா வெறும் 50.8 மார்க் மட்டுமே பெற்று 99வது இடத்தில் தான் இருக்கிறது. அதேபோல பிரிட்டன் 51.7 மார்க் உடன் 87வது இடத்தையையும், ஆஸ்திரேலியா 52.7 மார்க் உடன் 82வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+