சட்லஜ் ஆற்றில் விழுந்த கார்! மகன் வெற்றி எங்கே? பதைபதைப்புடன் இமாச்சல் விரைந்த சைதை துரைசாமி
டெல்லி: சட்லஜ் ஆற்றில் கார் மூழ்கியதால் தனது மகன் வெற்றி மாயமானதை அடுத்து இமாச்சல் பிரதேசத்திற்கு தந்தையும் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி விரைந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் விசுவாசி சைதை துரைசாமி. அவர் காலத்தில் அதிமுகவில் பயணித்த நிலையில் எம்ஜிஆர் மறைந்த நிலையில் அரசியலில் இருந்து விலகியிருந்தார். இதையடுத்து 2011 ஆம் ஆண்டு அவருக்கு ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார்.

ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. இதையடுத்து அவருக்கு அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக அறிவித்தார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் சைதை துரைசாமி வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சென்னை மேயராக பதவி வகித்தார் சைதை துரைசாமி. அவருக்கு மனைவி மல்லிகாவும் மகன் வெற்றியும் உள்ளனர். மகன் வெற்றி சினிமா இயக்குநராக உள்ளார். ஏற்கெனவே ஒரு படத்தை இயக்கிய நிலையில் தற்போது மற்றொரு படத்தை இயக்குகிறார்.
இதற்காக வெற்றி தனது உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத்துடன் இமாச்சல் பிரதேசத்திற்கு சென்றார். அங்கு கஷாங் லா எனும் பகுதியில் உள்ள சட்லஜ் ஆற்றங்கரை அருகே லொகேஷன் பார்க்க ஒரு வாடகை காரில் கோபிநாத்துடன் வெற்றி சென்றார். காரை அதே பகுதியை சேர்ந்த டென்சின் என்பவர் இயக்கினார்.
சட்லஜ் ஆற்றின் மேல் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இதையடுத்து காரின் சக்கரங்கள் நீரில் இருந்து வெளியே தெரிந்தது.
இதை பார்த்த சுற்றுலா பயணிகள் பதறி அடித்துக் கொண்டு போலீஸில் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த காரை மீட்ட போது அதில் ஓட்டுநர் டென்சின் சடலமாக கிடைத்தார். கார் விழுந்த வேகத்தில் கீழே விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றியின் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை.
அவரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. அவ்வப்போது பனிப்பொழிவு இருப்பதால் தொய்வும் ஏற்படுகிறது. இந்த நிலையில் மகனின் நிலையை அறிய இமாச்சலுக்கு சைதை துரைசாமி விரைந்துள்ளார். இதனிடையே சைதாப்பேட்டையில் அவருடைய ஆதரவாளர்கள் கூடியுள்ளனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications