சட்லஜ் ஆற்றில் கிடைத்த சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் உடைகள்.. சூட்கேஸும் கண்டெடுப்பு
டெல்லி: சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடைகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது திரில்லர் படத்திற்காக லொகேஷன் பார்க்க இமாச்சல் பிரதேசம் சென்றிருந்தார். அவருடன் உதவியாளர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத்தும் சென்றிருந்தார்.

அங்கு இருவரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பிறகு வாடகைக்கு காரை அமர்த்திக் கொண்டு அதில் இருவரும் லொகேஷன் பார்க்கச் சென்றுக் கொண்டிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சட்லஜ் ஆற்றின் மேல் உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்றுக் கொண்டிருந்த போது காரை ஓட்டிய டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கார் தாறுமாறாக ஓடியது.
உடனே 200 அடி உயரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது. தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சென்றனர். அங்கு காரை மீட்ட போது அதில் டென்சின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வெற்றியின் ஐஃபோன் கிடைத்துள்ளது. அது போல் அங்கு பாறை இடுக்கில் மனித மூளை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதை கைப்பற்றிய போலீஸார் அதை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்காக போலீஸார் காத்திருக்கிறார்கள்.
மறுபக்கம் சட்லஜ் ஆற்றில் கார் விழுந்த 15 கி.மீ. தூர சுற்றளவில் வெற்றியை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. சுமார் 5 நாட்களாக வெற்றி துரைசாமியை மீட்பு படையினர் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வெற்றி துரைசாமியின் உடைகள் கிடைத்தன. அவருடைய சூட்கேஸ், உடமைகள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications