Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எலான் மஸ்கால் இந்தியாவில் ஒன்னும் பண்ண முடியாது.." ஒரே போடாக போட்ட பிரபல தொழிலதிபர்! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக டெஸ்லா எலான் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா கார்களை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளார். இதற்கிடையே அவரால் இந்தியாவில் சாதிக்க முடியாது என ஜேஎஸ்டபிள்யூ குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் என்ன தான் விண்வெளிக்கே கூட ராக்கெட் அனுப்பினாலும் கூட இந்திய மார்க்கெட்டில் வெல்வது அவ்வளவு ஈஸியான வேலை இல்லை என சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அதிபரான பிறகு உலக அரசியல் மெல்ல மாறி வருகிறது. அமெரிக்கா மீது எந்த நாடுகள் எல்லாம் எவ்வளவு வரி வசூலிக்கிறதோ.. அதே அளவுக்கு நாங்களும் அந்த நாடுகள் மீது வரி விதிப்போம் என டிரம்ப் அறிவித்தார்.

Elon Musk Tesla

எலான் மஸ்க் டெஸ்லா

இதையடுத்து உலகின் பல நாடுகளும் அமெரிக்கா மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்து வருகிறது. அதன்படி இந்தியாவும் கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிகளைக் குறைக்கவுள்ளதாகத் தெரிகிறது. அதுபோல வரிகள் குறைக்கப்பட்டால் அது அமெரிக்கா கார் நிறுவனங்கள், குறிப்பாக எலான் மஸ்கின் டெஸ்லாவுக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலான் மஸ்கின் டெஸ்லா முக்கிய போட்டியைத் தரும் என்றே பலரும் நினைத்தனர்.

ஆனால், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால் வேறு விதமான கருத்துகளைக் கூறியுள்ளார். எலான் மஸ்கால் இந்தியச் சந்தையில் வெல்ல முடியாது எனக் குறிப்பிட்ட சஜ்ஜன் ஜிண்டால், இந்தியாவில் டாடா மற்றும் மஹிந்திரா செய்யும் கார்களுக்கு இணையாக எலான் மஸ்கால் கார்களை உற்பத்தி செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் எலான் மஸ்கால் சாதிக்க முடியாது

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சஜ்ஜன் ஜிண்டால், "எலான் மஸ்க் மிகவும் புத்திசாலி தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், அவரால் இந்தியாவில் வெற்றிபெற முடியாது. எலான் மஸ்க் இங்கே இந்தியாவில் இல்லை. அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்கு இந்தியாவின் கள சூழல் இந்தியாவுக்கு என்ன தேவை என்பது தெரியாது.

நாங்கள் இந்தியர்கள் இங்கே இருக்கிறோம். மஹிந்திரா மற்றும் டாடாவால் செய்ய முடிந்ததை எலான் மஸ்கால் செய்ய முடியாது. அது சாத்தியமில்லை. அமெரிக்காவில் அவர் இப்போது டிரம்பின் நிழலில் இருக்கிறார். இதனால் அமெரிக்காவில் அவரால் நினைத்ததைச் செய்ய முடியும். அவர் மிகவும் புத்திசாலி என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. விண்கலம் தொடங்கி ஏதேதோ செய்து வருகிறார். இதை எல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இந்தியாவில் வெற்றி பெறுவது எளிதானது இல்லை" என்றார்.

டெஸ்லா

உலகின் மிகப் பெரிய எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக இருக்கிறது. அடுத்தகட்டமாக எலான் மஸ்க் இந்தியாவில் தனது சந்தையை விரிவுபடுத்த உள்ளார். முதற்கட்டமாக அவர்கள் மும்பையில் முதல் ஷோரூமை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையின் மேக்கர் மேக்சிட்டியில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் மாதம் சுமார் ₹35 லட்சம் வாடகையில் டெஸ்லா இடத்தை தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக 5 ஆண்டுகள் ஒப்பந்தமும் போட்டுள்ளதாம்.

டெல்லியிலும் ஷோரூம்

மேலும், டெல்லியில் 4000 சதுர அடி இடத்தில் இன்னொரு இடத்தையும் பார்த்து வைத்துள்ளனர். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே புரூக்ஃபீல்ட் ஏரோசிட்டியில், மாத வாடகை சுமார் ₹25 லட்சத்தில் இன்னொரு ஷோரூமையும் அமைக்க டெஸ்லா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மிக விரைவில் எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவார் என்றும் இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனையை அவர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+