Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 கண்டிஷன்கள்.. "இதுதான் எங்களுக்கு முக்கியம்".. பிரதமர் மோடிக்கு விவசாயிகள் எழுதிய கடிதம்..!

பிரதமர் மோடிக்கு விவசாய அமைப்பினர் கடிதம் எழுதி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகளின் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது... அத்துடன், இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டங்கள் தொடரும் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்..

மேலும், டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டம் வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

விவசாயிகள்

விவசாயிகள்

ஆனால், பிரதமர் இப்படி அறிவித்துவிட்டாலும், இந்த முடிவை வரவேற்ற விவசாயிகள், தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை.. மாறாக, நாடாளுமன்றத்தில் 3 சட்டங்களும் முறைப்படி நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பும் ஒரு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

 ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

அது தொடர்பான ஆலோசனை கூட்டத்தையும் டெல்லி சிங்கு எல்லையில் நேற்றைய தினம் நடத்தியது.. அப்போது விவசாய சங்க தலைவர் பல்பில் சிங் ரஜேவால் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தபோது சொன்னதாவது: வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து ஆலோசனை செய்தோம்.. அத்துடன் நாங்கள் சில முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளோம்.. எங்களுடைய மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும்...

 6 நிபந்தனைகள்

6 நிபந்தனைகள்

அதற்காக ஏற்கனவே திட்டமிட்டபடி போராட்டங்கள் தொடரும்.. வரும் 27ம் தேதி நாங்கள் மறுபடியும் ஆலோசனை நடத்த உள்ளோம்... அப்போதைய நிலையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்.. மத்திய அரசிடம் நாங்கள் வைக்கும் 6 நிபந்தனைகள் இதுதான்: அனைத்து விவசாயிகளுக்கும் விளைபயிர்களுக்கு சாகுபடி செலவுக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதை உறுதிசெய்ய சட்டம் இயற்ற வேண்டும்.. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

 சட்டதிருத்த மசோதா

சட்டதிருத்த மசோதா

போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், டெல்லி மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் காற்றுத்தர மேலாண்மைக்கான சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களை நீக்க வேண்டும் என்பதே அந்த 6 கோரிக்கைகள். அதுமட்டுமல்லாமல், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்கவேண்டும்" என்று கூறினார்.

 அஜய் மிஸ்ரா

அஜய் மிஸ்ரா

இந்த 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை பிரதமருக்கும் இந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.. முன்னதாக, இந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை வரும் 29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரின் முதல் நாளிலேயே எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில், நாளை மறுதினம் பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த சட்டங்களை ரத்து செய்வதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+