உதயநிதி சனாதனத்தை எதிர்த்தாரே! அந்த சாபம்தான்.. சத்தீஸ்கரில் மூழ்கியது காங்.. சொன்னது யாருனு பாருங்க
டெல்லி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுகள்தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை இழக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

இந்த நிலையில் மற்ற 3 மாநிலங்களிலும் இரு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவில்லை. இன்னொரு மாநிலத்தில் ஆட்சியை இழந்துவிட்டது. இதில் சத்தீஸ்கரை பொருத்தமட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது.
அதாவது பாஜக 55 இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. ஆனால் ஆளும் காங்கிரஸோ 32 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சத்தீஸ்கரில் விவசாயிகள், பெண்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் நலனுக்கு பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது. எனினும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் அரையிறுதி போட்டியாகும். ஆனால் இதில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் கூறியிருப்பதாவது: சனாதன எதிர்ப்பு பேச்சுகள் கட்சியை தோல்வி கடலில் மூழ்கடித்துவிட்டது.
#WATCH | On Congress trailing in MP, Rajasthan and Chhattisgarh, party leader Acharya Pramod Krishnam says, "Opposing Sanatan (Dharma) has sunk the party. This country has never accepted caste-based politics...This is the curse of opposing Sanatan (Dharma)." pic.twitter.com/rertLLlzMS
— ANI (@ANI) December 3, 2023
ஜாதி ரீதியிலான அரசியலை இந்த நாடு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. சனாதனத்தை எதிர்த்ததற்கு இது சாபம் என தெரிவித்துள்ளார். அது போல் அரசியல் நிபுணர் டெஷீன் பூனாவாலா கூறியிருப்பதாவது: முதலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வென்றிருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
#WATCH | Political analyst Tehseen Poonawalla says, "First of all, I would like to congratulate Congress on winning the Telangana elections. But Congress needs to introspect on why they lost in Chhattisgarh, Madhya Pradesh, and Rajasthan... I think the biggest reason for this… pic.twitter.com/2S9jjAYK2G
— ANI (@ANI) December 3, 2023
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஏன் தோற்றது என்பது குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு முழு காரணம் சனாதனத்தை எதிர்த்ததே ஆகும். மேலும் ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்ததும் ஒரு காரணமாகும். அதிலும் மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் ஓபிசி கணக்கெடுப்பு நடத்துவதாக பேசியது முக்கிய காரணியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications