மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
டெல்லி:டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்து பேசியிருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப் படுகிறது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து... அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார். சசிகலா கைது... டிடிவி தினகரன் சிறைவாசம் ... இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது என பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.

ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைய... தனி இயக்கம் கண்ட டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவானார். தினகரனின் நடவடிக்கைகளால், திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார். அமமுகவில் இருந்து பலர் விலகி வருவதால் அக்கட்சி மூழ்கும் கப்பலாக உள்ளது என்று அவர் விமர்சித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பார் என்றும் கூட பரவலாக பேசப்பட்டது. அவரது மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் இயக்கம் ஒன்றை தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
இந் நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை ஜெய் ஆனந்த் திவாகரன் சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது.
மத்திய அமைச்சராக பியூஷ் கோயல்தான்... லோக்சபா தேர்தலுக்கான தமிழக பாஜகவின் பொறுப்பாளராக உள்ளார். எதற்கான சந்திப்பு இது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் முக்கியத் துவமாக கருதப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதில் பாஜகவும் நிச்சயமாக இணையும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், திவாகரன் மகன் சந்திப்பு.. அரசியலை ஒட்டியதாகவே இருக்கும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications