டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம்ம ஹேப்பி நியூஸ்! செளதி அரேபியா விசாவுக்கு போலீஸ் கிளியரன்ஸ் சர்ட்டிபிடிகேட் தேவை இல்லை!

Google Oneindia Tamil News

டெல்லி: செளதி (சவுதி) (சவூதி) அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க போலீஸ் நன்னடத்தை சான்றிதழ் தேவை என அந்நாட்டு அரசு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள செளதி அரேபியா தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியா, செளதி அரேபியா இடையே பல்லாண்டுகளாக நல்லுறவு தொடருகிறது.

இதனால் இந்தியர்கள் விசா பெறுவதற்கு காவல்துறையினரின் நன்னடத்தை சான்றிதழ் இனி தேவை இல்லை என்கிற சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் செளதி அரேபியாவில் 20 லட்சம் இந்தியர்கள் அமைதியாக வாழ்ந்து வருவது பாராட்டுக்குரியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saudi Arabia removes requirement of police certificates for visas to Indians

இதனால் செளதி அரேபியா செல்லும் இந்திய இளைஞர்கள் எளிதாக விசா பெற முடியும் என்கிற நிலைமை உருவாகி உள்ளது. செளதி அரேபியாவின் இந்த சிறப்பு அனுமதிக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

2019-ம் ஆண்டு செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் கமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் சடேகி இந்தியா வருகை தந்திருந்தார். அப்போது இந்திய அரசு உற்சாகமான வரவேற்பளித்தது. செளதி பட்டத்து இளவரசரின் வருகையின் போது அறிக்கை வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, நம் இரு நாட்டு உறவுகள் மேலும் துரிதமாக முன்னேறுவதற்கான புதியதொரு கோணத்தை உங்கள் வருகை ஏற்படுத்தியுள்ளது.

Saudi Arabia removes requirement of police certificates for visas to Indians

இந்தியாவில் இருந்து ஹஜ் புனிதப் பயணத்தினை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளதற்காக மேதகு இளவரசருக்கு நாம் நன்றி பாராட்டுகிறோம். சவுதி அரேபியாவில் இந்திய நாட்டைச் சேர்ந்த 27 லட்சம் பேர் அமைதியான வகையிலும் பயனுள்ள வகையில் வசித்து வருகின்றனர். இவர்கள் நம் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய கண்ணியாக விளங்குகின்றனர். சவுதி அரேபியாவின் முன்னேற்றத்தில் அவர்களின் சாதகமான பங்களிப்பையும் மேதகு இளவரசர் அவர்கள் பாராட்டியிருந்தார். அவர்களின் நலனை நீங்கள் எப்போதுமே பாதுகாத்து வருகின்றீர்கள். இதற்காக அவர்களின் நன்றியும் வாழ்த்துக்களும் எப்போதுமே உங்களுடன் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்தியா வருகிறார் சவுதி அரேபியா இளவரசர்! உற்சாக வரவேற்புத் தர வெளியுறவுத்துறை திட்டம்! இந்தியா வருகிறார் சவுதி அரேபியா இளவரசர்! உற்சாக வரவேற்புத் தர வெளியுறவுத்துறை திட்டம்!

அண்மையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், செளதி அரேபியா பயணம் மேற்கொண்டிருந்தார். செளதி அரேபியாவில் செப்டம்பர் 18, 19 தேதிகளில் நடைபெற்ற இந்தியா - சவூதி அரேபியா நட்புறவு குழுமத்தின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இக்கூட்டத்தில், சவூதி அரேபியா எரிசக்தித்துறை அமைச்சர் இளவசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் அல் சவுத் கலந்து கொண்டார். சவூதி அரேபியாவில் இந்திய மருந்து பொருட்களின் சந்தை வாய்ப்பை அங்கீகரித்தல், வர்த்தகத் தடைகளை நீக்குதல், யுபிஐ மற்றும் ரூபே அட்டைகளை சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Saudi Arabia removed requirement of police certificates for visas to Indians
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X