Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நபிகள் நாயகம் சர்ச்சை.. திரண்டு வரும் அரேபிய நாடுகள்! இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சவுதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்த நிலையில், அரபு நாடுகள் வரிசையாக இந்தியா மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளது.

Recommended Video

    Nupur Sharma Comment On Muhammad | முகமது நபிகள் பற்றி நுபுர் சர்மா.. என்ன நடக்கிறது? | *Politics

    பாஜக செய்தித்தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் நுபுர் சர்மா. தொடர்ந்து குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்த இவர், அதேபோலத் தான் சமீபத்திலும் பேசி இருந்தார்.

    தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பேசிய நுபுர் சர்மா இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகத்தை இகழும் வகையில் பேசி இருந்தார். அவரது பேச்சை நெறியாளரும் கண்டிக்கவில்லை.

     கலவரம்

    கலவரம்

    நுபுர் சர்மாவின் கருத்துக்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உத்தரப் பிரதேசம் கான்பூரில் இஸ்லாமியர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாகக் கலவரத்தில் முடிந்தது. இதில் 40 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் பெரிதான நிலையில், 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்த நுபுர் சர்மா மீது வழக்குகள் தொடரப்பட்டது.

     சர்வதேச அளவில்

    சர்வதேச அளவில்

    இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. முதலில் கத்தார், குவைத் போன்ற அரபி நாடுகள் இந்தியப் பொருட்களை புறக்கணித்தன. மேலும், இந்தியத் தூதர்களுக்கும் சம்மன் அனுப்பின. இப்போது இந்த பட்டியலில் சவுதி அரேபியாவும் இணைந்துள்ளது. நுபுர் சர்மாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சவுதி அரேபியா, மேலும் நுபுல் சர்மாவை இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையையும் சவுதி பாராட்டி உள்ளது.

     சவுதி அரேபியா

    சவுதி அரேபியா

    சவுதி அரேபியாவின் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் அல்-சௌத் தலைமையிலான வெளியுறவு அமைச்சகம், அனைத்து நம்பிக்கை மற்றும் மதங்களுக்கு மரியாதை அளிக்க வலியுறுத்தியது. இஸ்லாமியச் சின்னங்கள் மற்றும் அனைத்து மதங்களின் முக்கிய பிரமுகர்களை அவமதிக்கும் செயல்களை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     இந்தியப் பொருட்கள்

    இந்தியப் பொருட்கள்

    ஏற்கனவே கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகள் அங்குள்ள இந்திய தூதர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளன. மேலும், இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற வாதமும் அரபி நாடுகளில் அதிகரித்து உள்ளது. இந்தச் சூழலில் சவதி அரேபியாவும் இந்தப் பட்டியல் சேர்ந்துள்ளது. தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான வெறுப்பு பரப்பப்படுவதற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

     துணை குடியரசுத் தலைவர்

    துணை குடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கத்தார் சென்றுள்ள நிலையில், அந்த நாடும் இந்தியா தூதருக்குச் சம்மன் அனுப்பி உள்ளது. மேலும், கத்தார் துணை அமீர் வெங்கையா நாயுடுவுக்கு வழங்க இருந்த இரவு உணவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு வெங்கையா நாயுடு நடத்த இருந்த செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+