"வருமான வரி.." பழைய வரி முறையை மொத்தமாக நீக்கும் மத்திய அரசு! அப்போ வரி விலக்கு எதுவுமே கிடைக்காதா?
டெல்லி: மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கலாகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துகளைப் பெற்று வருகிறது. இதற்கிடையே பழைய வருமான வரி முறையை மொத்தமாக ரத்து செய்துவிட்டு, முழுமையாக புதிய வரி முறையை கொண்டு வருமான மத்திய அரசுக்கு எஸ்பிஐ வங்கி பரிந்துரை அளித்துள்ளது.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கப் போகும் கொள்கை ஆவணம் என்பதால் பட்ஜெட் மீது எப்போதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்தாண்டும் கூட மிடில் கிளாஸ் மக்கள் வரி விலக்கைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
கருத்துக் கேட்கும் மத்திய அரசு:
பட்ஜெட் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பரிந்துரைகளைப் பெறுவது வழக்கம். அதன்படி நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பிலும் சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் வருமான வரி தொடர்பாகவும் வரி விலக்குகள் தொடர்பாகவும் சில முக்கிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன.
இப்போது நமது நாட்டில் பழைய வருமான வரி முறை, புதிய வருமான வரி என இரண்டு முறைகள் உள்ளன. தற்போதுள்ள பாஜக அரசு கொண்டு வந்தது தான் இந்த புதிய வரி முறை. சமீப ஆண்டுகளாக மத்திய அரசு இந்த புதிய முறைக்கே அதிக சலுகைகள் அறிவித்து வருகிறது. பழைய வருமான வரி முறையில் இருப்போர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தாலே வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், அதில் சேமிப்பு, காப்பீடு ஆகியவற்றுக்குப் பல வரி விலக்குகள் உள்ளன. புதிய முறையில் இதுபோல வரி விலக்கு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக ரத்து செய்யப் பரிந்துரை:
இதற்கிடையே வரி செலுத்தும் முறையை எளிமையாக்கிவிட அனைத்து மக்களையும் புதிய வரி முறைக்கு மாற்ற வேண்டும் என எஸ்பிஐ பரிந்துரை அளித்துள்ளது. நமது நாட்டில் மொத்தம் 8.2 கோடி பேர் வரி செலுத்தி வரும் சூழலில், அவர்கள் அனைவரையும் எளிமைப்படுத்தப்பட்ட புதிய முறைக்கு மாற்றவும், பழைய வரி முறையை முழுமையாக நிறுத்தவும் எஸ்பிஐ பரிந்துரை அளித்துள்ளது. புதிய வரி முறைக்கு மாறுவதன் மூலம் ஒருவரால் ரூ.1.15 லட்சம் வரை வரிகளைச் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி விலக்குகளைப் பொறுத்தவரை என்பிஎஸ் எனப்படும் தேசிய பென்ஷன் சேமிப்பின் பங்களிப்பை ஆண்டுக்கு ரூ.50,000 இலிருந்து ஆண்டுக்கு ரூ. 1 லட்சமாக உயர்த்தவும், மருத்துவ காப்பீட்டையும் ஆண்டுக்கு ரூ. 25,000ல் இருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தவும் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பு:
மேலும், தற்போது ரூ.10-15 லட்சம் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 20% வருமான வரி விதிக்கப்படும் சூழலில், அதை 15% ஆகக் குறைக்கவும் எஸ்பிஐ வங்கி பரிந்துரைத்துள்ளது.. அதேபோல ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்களுக்கு தற்போதுள்ள அதிகபட்ச வரியான 30% வரியைத் தொடர்ந்து விதிக்குமாறு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த மாற்றங்களை அமல்படுத்தினால் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுப் பழைய வரி முறையை மொத்தமாக ரத்து செய்யுமா இல்லை இரண்டு ஆப்ஷன்களை மக்களுக்குத் தொடர்ந்து வழங்குமா என்ற கேள்விக்கு நமக்கு சில நாட்களில் விடை கிடைத்துவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications