டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க முடியாது.. வழக்கை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்

ஆண்களின் திருமண வயது 18 ஆக குறைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆண்களின் திருமண வயதை குறைக்க கோரிய மனு தள்ளுபடி- வீடியோ

    டெல்லி: ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

    குழந்தை திருமணங்கள் அதிகரித்த வண்ணம் இருந்ததால் திருமணத்திற்கான வயது உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது. அதன்படி, நமது நாட்டின் சட்டத்தின்படி ஆண்களின் திருமண வயது 21 என்றும், பெண்களின் திருமண வயது 18 என்றும் உள்ளது. இந்த வயதிற்கு முன்னர் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் என்றும் கருதப்படுகிறது.

    அனைத்து உரிமைகள்

    அனைத்து உரிமைகள்

    இந்நிலையில், அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "அனைத்து குடிமக்களும் தங்கள் அரசுகளை தேர்ந்தெடுக்கும் உரிமை முதற்கொண்டு, ராணுவத்தில் சேர அனுமதி உள்ளிட்ட எல்லா விஷயங்களும்18 வயதில் வழங்கப்பட்டுள்ளது.

    [அரசியல் புயலுக்கு ரெடியாகவும்.. நாளை மறுநாள் வெளியாகிறது தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு?]

    18 வயது

    18 வயது

    ஆனால் ஆண்களின் திருமண வயது மட்டும் 21 ஆக இருக்கிறது. தங்கள் மனைவியை தேர்ந்தெடுக்கும் திறனும் இந்த 18 வயதிலேயே வந்து விடுகிறது என்பதை கருத வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

    மனு தள்ளுபடி

    மனு தள்ளுபடி

    இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தாக்கல் செய்த மனுவானது விசாரிப்பதற்குத் தகுதியற்றது என கூறி தள்ளுபடியே செய்துவிட்டனர்.

    அபராதம்

    அபராதம்

    கூடவே மனுவை போட்ட அசோக் பாண்டேவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர். வேண்டுமானால் 18 வயது நிரம்பிய ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனுதாக்கல் செய்தால் அதனை நாங்கள் விசாரிக்கிறோம் என்று கருத்து தெரிவித்தனர்.

    English summary
    SC dismissed the welfare-petition demanding Mens marriage to be reduced to 18 years
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X