Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடிக்கு எதிராக வேட்புமனு அளித்த முன்னாள் ராணுவ வீரரின் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி தள்ளுபடி!

பிரதமர் மோடிக்கு எதிராக மனுதாக்கல் செய்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக மனுதாக்கல் செய்த இந்திய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர், அங்கு வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்தார்.

SC dismisses plea of Ex-BSF army mans case against ECIs rejection of his nominations

இந்திய ராணுவ வீரர்களுக்கு மிக மோசமான உணவு அளிக்கப்படுகிறது என்று வீடியோ வெளியிட்டார். இவர் வெளியிட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலானது. இதையடுத்து தேஜ் பகதூர் இந்திய ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் இவர் தேர்தலில் நிற்க முடிவெடுத்தார். இவர் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி சார்பாக சமாஜ் வாதி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர்கள் ஐந்து வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட கூடாது என்று கூறி தேர்தல் ஆணையம் அவரின் மனுவை நிராகரித்து இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தேஜ் பகதூர் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. நான் கொடுத்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது. அதனால் என்னுடைய மனுவை ஏற்கவேண்டும் என்று தேஜ் பகதூர் வாதம் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையம் ஏன் இவரின் மனுவை நிராகரித்தது என்று விளக்கத்தை மனுவாக அளித்தது.

இதை பரிசோதித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை சரிதான். சரியான விதிமுறைகளை பயன்படுத்திதான் இந்த வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது, என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+