தீபாவளி பட்டாசு வழக்கு.. தென்மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த சிறப்பு சலுகை என்ன தெரியுமா?
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க ஏற்ற நேரத்தை தேர்வு செய்து கொள்ளும்படி தென்மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க ஏற்ற நேரத்தை தேர்வு செய்து கொள்ளும்படி தென்மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க முடியாது. பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்ட தமிழக அரசின் மனுவில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு இதில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
[தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம்தான் அனுமதி.. தமிழக அரசின் மனு நிராகரிப்பு.. அதிர்ச்சி!]
இந்த நிலையில் வடமாநிலங்களில் இரவு 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தென் மாநிலங்களுக்கு முக்கிய சலுகை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
தென்மாநிலங்களும் இரண்டு மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க முடியும். ஆனால் அந்த இரண்டு மணி நேரத்தை தென் மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ள முடியும். அதாவது காலையில் வெடிப்பதா, மாலையில் வெடிப்பதா, இரவில் வெடிப்பதா என்று முடிவு செய்து கொள்ள முடியும்.
இரவில் ஒரு மணி நேரம் பகலில் ஒரு மணி நேரம் என்று மாற்றி மாற்றி வெடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த தென்மாநில அரசுகள் இதற்கான அறிவுரைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வடக்கிலும், தெற்கிலும் கொண்டாடப்படும் தீபாவளி கொண்டாட்டங்களில் அதிக வேறுபாடு உள்ளது. வடமாநிலங்களில் பொதுவாக மக்கள் ராவணனை ராமன் வதம் செய்ததை நினைவு கூறும் வகையில் இரவில் வெடி வெடிப்பார்கள். ஆனால் தென்னிந்திய மக்கள், குறிப்பாக தமிழர்கள் நரகாசுரனை வதம் செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அதிகாலையிலேயே வெடி வெடிப்பார்கள்.
இந்த கலாச்சார வேறுபாட்டை மதிக்கும் வகையில் இந்த சலுகை தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு இந்த நேர தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications