பாடாய்படுத்தும் ஓமிக்ரான் வைரஸ்.. உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் நேரடி விசாரணை ரத்து!
டெல்லி: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் ஓமிக்ரான் ஆதிக்கம்
ஓமிக்ரானை தடுக்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது. முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்தியாவில் தற்போது 1,500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

டெல்லியில் நிலை பரிதாபம்
தலைநகர் டெல்லியில்தான் நாட்டிலேயே மிக அதிகபட்ச ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க கொரோனா பாதிப்பும் டெல்லியில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,194 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. டெல்லியில் மே 20-ம் தேதிக்கு பிறகு பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். தலைநகரில் பாசிடிவ் விகிதம் 4.59 சதவீதமாக உள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள்
டெல்லியில் ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் ஓமிக்ரான் மாறுபாடு என்று இரண்டும் மக்களை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. இதனால் டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையம் வருபவர்கள் 7 நாட்கள் தனிமை கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணொலி மூலம் மட்டும் விசாரணை
காணொலி மூலம் மட்டும் விசாரணை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் அடுத்த 2 வாரங்களுக்கு காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 வாரங்களுக்கு நேரடி விசாரணை ரத்து செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பதிவுத்துறை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications