ஓ.பி.ரவீந்திரநாத் அப்பீல் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்- எம்.பி. பதவி பறிபோகிறது?
டெல்லி: அதிமுகவின் ஒரே ஒரு லோக்சபா எம்.பி.யான ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது; இதனால் ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு பின் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. பதவி பறிபோய்விடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஓ.பி.ரவீந்திரநாத். அதிமுகவின் ஒரே ஒரு லோக்சபா எம்.பியான ஓபி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் வருமான உள்ளிட்ட விவரங்களை ரவீந்திரநாத் மறைத்துவிட்டார் என்பது மிலானி தொடர்ந்த வழக்கு.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து அண்மையில் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஓ.பி.ரவீந்திரநாத் தமது வேட்பு மனுவில் வருவாய் தொடர்பான விவரங்களை மறைத்துள்ளார்; ஆகையால் ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது. இதனால் லோக்சபாவில் அதிமுகவின் ஒரே ஒரு எம்.பி. பதவியும் பறிபோகும் நிலைமை உருவானது. இருப்பினும் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்கு ஆகஸ்ட் 4-ந் தேதி வரை அவகாசம் அளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனடிப்படையில் ஓபி ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தம்மையும் சேர்க்க கோரி திமுகவின் தங்க தமிழ்ச்செல்வனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். தங்களது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என ஓபி ரவீந்திரநாத் தொடர்ந்து விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓபி ரவீந்திரநாத்தின் எம்பி பதவி இயல்பாகவே ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு பின் பறிபோகும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications