4 மடங்கு ஆக்சிஜன் கூடுதலாக வாங்கிய டெல்லி அரசு; 12 மாநில பாதிப்புக்கு காரணம்- உச்சநீதிமன்ற குழு
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்திய போது கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு தேவையைவிட 4 மடங்கு ஆக்சிஜனை கூடுதலாக வாங்கி வைத்துக் கொண்டது; இதனால் 12 மாநிலங்கள் ஆக்சிஜன் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டன என்று உச்சநீதிமன்ற குழு குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் சப்ளை தொடர்பாக ஆராய்வதற்காக எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தலைமையில் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. இந்த குழுவில் டெல்லி அரசின் முதன்மை உள்துறை செயலர் பூபிந்தர் பல்லா, மேக்ஸ் இயக்குநர் சந்தீப் புத்திராஜா, மத்திய நீர்வளத்துறை இணை செயலர் சுபோத் யாதவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

4 மடங்கு ஆக்சிஜன்
இந்த குழு உச்சநீதிமன்றத்தில் தமது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. அதில் டெல்லி அரசுக்கு தேவையான ஆக்சிஜன் என்பது 284 முதல் 372 மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்தது. ஆனால் இதனைப் போல 4 மடங்கு ஆக்சிஜன் அதாவது 1,140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வாங்கி வைத்துக் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

12 மாநிலங்களுக்கு பிரச்சனை
அத்துடன் இப்படி டெல்லி அரசு கூடுதலான ஆக்சிஜனை வாங்கி வைத்துக் கொண்டதால் 12 மாநிலங்கள் பற்றாக்குறையை சந்திக்க நேரிட்டது என்றும் இந்த குழு குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள சிங்கால் மருத்துவமனை, அருணா ஆசிப் அலி மருத்துவமனை, ஈஎஸ்ஐசி மருத்துவமனை, லைப்ரே மருத்துவமனை ஆகியவற்றில் சில படுக்கைகளே இருக்கின்றன. ஆனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை என கூறி டெல்லி அரசிடம் வாங்கி வைத்து கொண்டன.

பயன்படுத்தியது குறைவுதான்
இதனால்தான் டெல்லி அரசு கூடுதல் ஆக்சிஜனை கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது என்றும் உச்சநீதிமன்ற குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஏப்ரல் 29 முதல் மே 10-ந் தேதி வரை டெல்லி அரசுக்கு 350 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான ஆக்சிஜன் தேவைப்படவே இல்லை என்பதையும் உச்சநீதிமன்றக் குழு தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வரும் 30-ல் விசாரணை
ஏற்கனவே டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினமும் சப்ளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் விசாரணை வரும் 30-ந் தேதி நடைபெற உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications