விளம்பரத்துக்கு ரூ.1100 கோடி செலவு.. உள்கட்டமைப்புக்கு இல்லையா? டெல்லி அரசை காய்ச்சிய உச்சநீதிமன்றம்
டெல்லி: 3 ஆண்டுகளில் ரூ.1,100 கோடியை விளம்பரத்துக்கு செலவு செய்யும் டெல்லி அரசால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
டெல்லியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அம்மாநில ஆம் ஆத்மி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் RRTS எனப்படும் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், RRTS திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் டெல்லி அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று தெரியவந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி அரசு கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் விளம்பரத்திற்காக செலவு செய்த நிதி அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து டெல்லி அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சுமார் ரூ.1,073 கோடியை கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரத்துக்காக செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் சுதன்சு தூலியா அடங்கிய அமர்வு, "டெல்லி அரசு RRTS திட்டத்துக்கான நிதியை ஒதுக்காததன் காரணமாகவே நாங்கள் விளம்பரத்துக்கு செலவிடப்பட்ட நிதியை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தோம். கடந்த 3 நிதி ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் ரூ.1100 கோடி செலவழிக்க முடிகிறது என்றால், நிச்சயமாக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் நிதி பங்களிப்பு செய்ய முடியும்" என்று குறிப்பிட்டனர்.
அத்துடன் டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வியிடம், "RRTS திட்டத்துக்கு அரசு பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அரசின் விளம்பர பட்ஜெட்டை நாங்கள் பறிமுதல் செய்வோம்" என்று கூறினார். இதனை தொடர்ந்து அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி அளித்த டெல்லி அரசு வழக்கறிஞர், ஆனால் அதற்கு போதிய கால அவகாசம் வழங்கி தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனை கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் RRTS திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசு உறுதியளித்ததாக கூறி, அரசின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடனாக இருக்கும் தொகையை செலுத்த உத்தரவிட்டது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications