டிஜிட்டல் பிளவு.. சம உரிமைக்கு எதிரானது.. கோவின் தளத்தை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்!
டெல்லி: வேக்சின் வழங்குவதில் டிஜிட்டல் ரீதியாக மக்கள் பிளவு படுத்தப்பட்டுள்ளனர், கோவின் (CoWIN) போன்ற தளங்கள் மூலம் வேக்சினுக்கு டிஜிட்டல் ரிஜிஸ்டிரேஷன் செய்ய சொல்வது சம உரிமை எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறது. இதில் மத்திய அரசின் வேக்சின் கொள்கைகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையில் கோவின் தளத்தை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர்.

டிஜிட்டல்
அதில், வேக்சின் வழங்குவதில் டிஜிட்டல் ரீதியாக மக்கள் பிளவு படுத்தப்பட்டுள்ளனர். இணையம் உள்ளவர்களுக்கு எளிதாக வேக்சின் கிடைக்கும், இணையம் இல்லை என்றால் வேக்சின் கிடைக்காது என்ற பிளவு ஏற்பட்டுள்ளது. இது சம உரிமைக்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கும் எதிரானது. இந்தியாவில் எல்லோரிடமும் வேகமான இணையம் இல்லை.

கிராமம்
எல்லோருக்கும், எல்லா கிராமத்திலும் இணைய வசதி இல்லை. அப்படி இருக்கும் போது கோவின் (CoWIN) போன்ற தளங்கள் மூலம் வேக்சினுக்கு டிஜிட்டல் ரிஜிஸ்டிரேஷன் செய்ய சொல்வது முழுக்க முழுக்க தவறானது. நல்ல படித்த இணையம் தெரிந்த மக்கள் கூட கோவின் (CoWIN) மூலம் தங்கள் பெயரை பதிவு செய்ய முடியவில்லை. கோவின் (CoWIN) எந்த அளவிற்கு சாத்தியமானது என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும்.

மையம்
அதோடு கணினி மையங்களில் கூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கோவின் (CoWIN) தளத்தில் ஸ்லாட் கிடைக்குமா என்று மக்கள் ஏங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் முகாம்களிலேயே பதிவு செய்யும் முறைகள் இருந்தாலும் இது முறையாக ஒழுங்குபடுத்தப்படவில்லை. ஒருநாளும் எத்தனை முகாம்களில் பதிவு செய்யப்படும், எந்த வயது கொண்டவர்களுக்கு எவ்வளவு ரிஜிஸ்டிரேஷன் செய்யப்படும் என்பது தொடர்பான முழு விவரம் இல்லை.

மொழிகள்
அதேபோல் கோவின் (CoWIN) தளமும், ஆரோக்கியசேது தளமும் பல்வேறு மாநில மொழிகளில் இல்லை. மேலும் விழிமாற்று திறனாளிகள் உள்ளிட்ட பலரால் கோவின் (CoWIN) தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய முடியாத நிலை உள்ளது. இது சம உரிமை கிடையாது. மேலும் கோவின் (CoWIN) செயலியில் ஆடியோ அல்லது டெக்ஸ்ட் கேட்சா இல்லை.

வேக்சின்
வேக்சின் தேர்வு, வயது தேர்வு, பெயர் பதிவிடும் முறை கோவின் (CoWIN) தளத்தில் அவ்வளவு எளிதாக இல்லை. எத்தனை ஸ்லாட் இருக்கிறது, எவ்வளவு வேக்சின் உள்ளது என்பதை தெளிவாக பார்க்க முடியவில்லை. மாற்று திறனாளிகளுக்கு என்று தனிப்பட்ட வசதிகள் இல்லை, என்று உச்ச நீதிமன்றம் கோவின் (CoWIN) தளத்தை விமர்சனம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications