பக்ரீத் பண்டிக்கைக்காக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு: கேரளா அரசை வெளுத்து வாங்கிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: பக்ரீத் பண்டிக்கைகாக கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்த கேரளா அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் கேரளா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது உச்சநீதிமன்றம்.
நாட்டில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் அதிகம் என்ற நிலை உள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்வு
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கொரொனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இன்று வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
கேரளா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பி.கே.டி. நம்பியார் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை நீதிபதிகள் ஆர். எஃப் நாரிமன், பி.ஆ. கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது பி.கே.டி. நம்பியார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது 10.96% ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் கேரளாவில் தளர்வுகளை மாநில அரசு அறிவித்தது சரியானது அல்ல என்றார். இந்த வழக்கில் ஒரே நாளில் கேரளா அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,

உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, பக்த்ரீத் பண்டிகைக்காக கொரோனா கட்டுப்பாடுகளை கேரளா அரசு தளர்த்தியதை ஏற்க முடியாது; நியாயப்படுத்தவும் முடியாது. கட்டுப்பாடுகள் தளர்வால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும்; அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவை மதித்து நடக்க வேண்டும்; கேரளா அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உ.பி. கன்வார் யாத்திரை
முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் சிவாலயங்களுக்கு கங்கை நீரை கொண்டு வரும் கன்வார் யாத்திரைக்கு அம்மாநில அரசு அனுமதி கொடுத்திருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கன்வார் யாத்திரையை உத்தரப்பிரதேச அரசு ரத்து செய்ய முடியுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதையடுத்து கன்வார் யாத்திரையை அனுமதிக்கவில்லை என உ.பி. அரசு விளக்கம் தந்தது.

தளர்வுகளுக்கு எதிர்ப்பு
இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தமது ட்விட்டர் பக்கத்தில், கன்வார் யாத்திரை தவறு எனில் பக்ரீத் பண்டிகைகளுக்காக கட்டுப்பாடுகளை தளர்த்துவும் சரியானது அல்ல என கூறியிருந்தார். மேலும் கேரளாவின் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கமும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications