குஜராத் கலவர விவகாரத்தில் மோடிக்கு எதிராக சதி- டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
டெல்லி: 2002-ம் ஆண்டு குஜராத் கலவர சம்பவத்தை முன்வைத்து அப்போதைய மாநில முதல்வரான இன்றைய பிரதமர் மோடிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்துகிறது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதவன்முறைகள் வெடித்தன. இந்த மதவன்முறையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலக நாடுகளை உலுக்கியது 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகள்.

சிறப்பு புலனாய்வுக் குழுவால் மோடி விடுவிப்பு
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் வன்முறைகளின் போது காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் மோடி உட்பட 64 பேர் மீது குற்றமும் சாட்டப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்தது.

குஜராத் வழக்கில் மோடி விடுவிப்பு சரி
சிறப்பு புலனாய்வுக் குழுவானது மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இது தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வுக் குழு விடுதலை செய்ததை கடந்த ஜூன் 24-ந் தேதி உறுதி செய்தது. அதற்கு மறுநாளே அதாவது ஜூன் 25-ந் தேதியே 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை சம்பவங்களில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக டீஸ்டா செதல்வாட்டை அதிரடியாக கைது செய்தது சிறப்பு புலனாய்வுக் குழு

டீஸ்டா அதிரடி கைது
சமூக ஆர்வலர் டீஸ்டாவுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. இவ்வழக்குகளில் தங்களுக்கு ஜாமீன் கோரி டீஸ்டா, ஶ்ரீகுமார் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து டீஸ்டா செதல்வாட், ஶ்ரீகுமார் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

டீஸ்டாவுக்கு ஜாமீன் கிடைக்குமா?
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 25-ந் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 2 நாட்களில் குஜராத் அரசின் பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனடிப்படையில் குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது. குஜராத் வன்முறைகளின் போது, முக்கிய தலைவர் ஒருவருக்கு எதிராக டீஸ்டா சதித் திட்டம் தீட்டினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசியல் தலைவர் ஒருவரை சந்தித்தார்; பெரும் தொகை பணம் பெற்றார் என்றும் குஜராத் அரசு கூறியுள்ளது. இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்ச் இன்று டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்துகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications