லைவ் லொகேஷன் கணவருக்கு அனுப்பி பதறிய ரஷ்யப் பெண்.. டெல்லி டாக்ஸியில் வெளிவந்த உண்மை
டெல்லி: நள்ளிரவு நேரத்தில் விமான நிலையத்தில் இறங்கி தவித்த ரஷ்ய நாட்டுப் பெண் பயணிக்கு, டாக்ஸி டிரைவர் ஒருவர் சாப்பாடு தந்து, பாதுகாப்பாக வழிகாட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது... இது தொடர்பான வீடியோ, போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. யார் இந்த ரஷ்ய பெண்? என்ன நடந்தது டெல்லியில்? இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!!
ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர், சுற்றுலா நிமித்தமாக முதன்முறையாக இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மிட்நைட்டில் வந்து இறங்கியிருக்கிறார்..

டெல்லி ஏர்போர்ட்
ஏர்போர்ட்டிலிருந்தே, தங்குமிடத்திற்கு செல்வதற்காக ஆப் மூலமாக, டாக்ஸி ஒன்றை புக்கிங் செய்தார். டிரைவரின் வேண்டுகோளுக்கிணங்க தனது ஓடிபி நம்பரை காண்பித்துவிட்டு காரில் பயணத்தை ஆரம்பித்தார்..
ஆனால் நடுவழியில் அந்த பெண்ணுக்கு பசி எடுத்துள்ளது.. ஆனால் நள்ளிரவு என்பதால், அந்த நேரத்தில் ஏதாவது ஓட்டல் திறந்திருக்குமா என்று டிரைவரிடம் ஆங்கிலத்தில் கேட்டுள்ளார் அந்த பெண்.. உடனே டாக்ஸி டிரைவர் உத்கர்ஷ் பாண்டே, கொஞ்ச தூரத்தில் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டுச் சென்றார்.
லைவ் லொகேஷன்
அது நள்ளிரவு நேரம் என்பதாலும், முன்பின் தெரியாத இடம் என்பதாலும் அந்த பெண் பயந்துவிட்டார்.. டிரைவர் சாப்பாடு வாங்கி வர சென்றாலும், எப்போது வருவாரோ? என்ற அச்சமும் கவ்விக் கொண்டது.. அதனால் தனது பயண பாதையின் லைவ் லொகேஷனை, வாட்ஸ்அப் மூலம் தனது கணவருக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், டிரைவர் உத்கர்ஷ் பாண்டே சிறிது நேரத்திலேயே சுடச்சுட பிட்சா உணவை வாங்கி வந்து, அப்பெண்ணை சாப்பிட சொன்னார்.. பிறகு அவர் புக்கிங் செய்த ஓட்டல் வாசல்வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று சேர்த்தார்.
ரஷ்யப் பெண் நெகிழ்ச்சி
டிரைவரின் இந்த சேவையை பார்த்து, அந்த பெண் நெகிழ்ந்து போய்விட்டார்.. பயணக் கட்டணம் மற்றும் சாப்பாட்டு செலவு என அனைத்தையும் சேர்த்து 1000 ரூபாயை கூடுதல் அன்பளிப்பாக அதாவது டிப்ஸ் போல தர முயன்றார்..
ஆனால், டிரைவர் உத்கர்ஷ் பாண்டே புன்னகைத்தபடியே அந்த பணத்தை ஏற்க மறுத்துவிட்டார்.... "எங்கள் நாட்டில் விருந்தினர்களைக் கடவுளாகக் கருதுவது வழக்கம்" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.
இந்திய பண்பாட்டை உலகறிய செய்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை அப்பெண்மணி சோஷியல் மீடியாவிலும் ஷேர் செய்துள்ளார்.. டிரைவரின் இந்த நேர்மையையும் விருந்தோம்பல் பண்பையும் பாராட்டியுள்ள அவர், விரைவில் தனது கணவருடன் மீண்டும் இந்தியாவுக்கு வருகை தர போவதாகவும் தெரிவித்துள்ளார். டிரைவர் உத்கர்ஷ் பாண்டேவின் இந்த செயலுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன...!!


Click it and Unblock the Notifications
