சுதந்திர தினத்தன்று.. அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல்! பெரும் பரபரப்பு
டெல்லி: சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.
அதேபோல பல்வேறு மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். நாடு முழுவதும் அமைதியான முறையில் கோலாகலமாகச் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்தச் சூழலில் காஷ்மீரில் சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் மீது பயங்கரவாதிகள் கிரானைட் குண்டை வீசினர். இந்தச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
காயமடைந்த அந்த காவலர் அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தான் மற்றொரு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இருந்தனர்.
காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த கிரானைட் குண்டை வீசினர். இதில் கரண் குமார் சிங் என்பவர் காயம் அடைந்தார். அவருக்கு ஸ்ரீநகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற கிரைனட் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications