'ஹெவி டிரைவர்'.. அதிகப்படியான பயணிகள்.. அப்படியே முன்னாடி தூக்கிய இ-ரிக்ஷா. வீடியோ பாருங்க
டெல்லி: இ-ரிக்ஷா ஒன்று டெல்லியில் அதிக பயணிகளுடன் சென்ற நிலையில் திடீரென முன்னாடி சக்கரங்கள், பின்னால் தூக்கி கொண்டது. இதனால் டிரைவரும், பின்னால் அமர்ந்திருந்த பயணிகள் அப்படியே தரையில் கவிழ்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆட்டோ ரிக்ஷாக்கள் பொதுவாக அதிகப்படியான பயணிகள் காரணமாக அடிக்கடி நிரம்பி வழிந்தபடி செல்வதை நாம் பார்த்திருப்போம். 4 பேர் செல்ல வேண்டிய ஆட்டோக்களில் 10 பேர் வரை அசால்ட்டாக செல்வார்கள். ஆட்டோக்கள் மினி பஸ்களை போல் கூட்டங்களை ஏற்றிச் செல்லும் காட்சிகளை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நகரங்களில் அதிகமாக நடக்கும். குறிப்பாக ரயில் மற்றும் பேருந்து நிலையங்களை சுற்றி அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்று தான்.

ஆனால் எப்போதாவது ஒரு இ-ரிக்ஷா, ஆட்டோக்களை போல் அதிக பயணிகளுடன் செல்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, அதுவும் நீங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு கூட்டம் செல்வதை பார்த்திருக்கிறீர்களா.. டெல்லியில் ஒரு யூடியூபர் இது தொடர்பாக வீடியோ ஒன்றை மொபைலில் படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்,
குறிப்பிட்ட வீடியோவில், ஒரு யூடியூபர் வழக்கம் போல் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார், அப்போது அவர் பைக்கில் பொருத்தியிருந்த போன் கேமராவில், இ-ரிக்ஷா ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததை வீடியோ எடுத்திருக்கிறது.
குறிப்பிட்ட அந்த இ-ரிக்ஷாவில் நடு மற்றும் பின்பகுதியில் அதிகப்படியான பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். இதனால் டிரைவர் கஷ்டப்பட்டு ஓட்டிச் சென்ற நிலையில், சில அடி தூரத்தில் இ-ரிக்ஷாவின் முன்சக்கரம் தூக்கி கொண்டது. காற்றில் பறந்து போய் டிரைவர் விழுந்தார். பின்னால் அமர்ந்திருந்தவர்களும் தரையில் விழுந்தனர். இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்ததால் சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
இதனிடையே இன்ஸ்டாகிராமில் இந்த காட்சிகளின் சில வினாடியகளை யூடியூபர் பகிர்ந்துள்ளார். அதன் முழு வீடியோவையும் யூடியூப்பில் பதிவேற்றி உள்ளார். வண்டியில் அதிக நபர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஈ-ரிக்ஷா ஓட்டுநரை. அந்த யூடியூபர், இவர் தான் 'ஹெவி டிரைவர்' என்று கிண்டலாக கூறியுள்ளார். இதனிடையே கீழே விழுந்த பயணிகளையும், கவிழ்ந்த ரிக்ஷாவையும் அருகில் இருந்த பயணிகள் பலர் ஓடிச் சென்று தூக்குவதாக வீடியோ முடிகிறது. இந்த வீடியோ பலருக்கு சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. எல்லாரும் வீடியோவிற்கு கீழ் சிரித்து வைத்துள்ளனர். நீங்களே வீடியோவை பாருங்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications