அகங்காரத்தை தூக்கிப்போடுங்க.. ஒன்னாசேர்ந்து பாடுபடுவோம் - ட்விட்டரில் சீறிய காங்கிரஸ் தலைவர்
டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் அகங்காரத்தை எல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு ஒன்றாக செயல்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் விவேக் தன்ஹா தெரிவித்து இருக்கிறார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியையும் பறிகொடுத்தது. இந்த நிலையில், அனைத்து இந்திய காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.
காங்கிரஸின் அடுத்தக்கட்ட திட்டங்கள், தேர்தல் தோல்விகள் மற்றும் நிலையான தலைமை குறித்து ஆலோசிக்க இன்று அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் மாலை 4 மணியளவில் கூடியுள்ளது.

57 தலைவர்களுக்கு அழைப்பு
இந்த கூட்டத்திற்காக 57 காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, ஆனந்த் ஷர்மா, கே.சுரேஷ் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

அகங்காரத்தை ஒதுக்கி வைப்போம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, தற்போதைய காங்கிரஸ் தலைமைக்கு எதிரான G-23 குழுவில் இடம்பெற்று இருக்கும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான விவேக் தன்ஹா, "நமது அகங்காரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சிக்காக சுயநலம் இன்றி உழைக்க வேண்டும். இது நாம் சிந்திக்க வேண்டிய தருணம்.

நாம் கட்சிக்கு என்ன செய்தோம்?
கட்சி உங்களுக்காக என்ன செய்தது என்பது முக்கியம் இல்லை. நீங்கள் கட்சிக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்பதே முக்கியம். காங்கிரஸ் காரியக் கமிட்டியிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவின் கொள்கையை மறுகட்டமைப்பு செய்யுங்கள். நமக்கு திறமையும் ஆதரவும் உள்ளது. நமது தற்போதைய தேவை கூட்டு உழைப்புதான். அனைத்தையும் சேர்ந்து செய்வோம்." என்றார்.

குலாம் நபி ஆசாத் வீட்டில் கூட்டம்
5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில் காங்கிரஸ் எதிர்கோஷ்டியான ஜி-23 தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், கபில் சிபல், மணிஷ் திவாரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் படுதோல்விகள் குறித்தும், எதிர்காலத்தில் தோல்விகளை தவிர்ப்பது பற்றியும் தலைவர்கள் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகுல் வாஸ்னிக்கை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்
அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் பெயரை தலைவர்கள் பரிந்துரை செய்ததாகவும் எதிர்ப்புக்குழு தலைவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்ததாகவும் ஆனால், அந்த பரிந்துரையை கட்சித் தலைமை நிராகரித்துவிட்டதாகவும் அந்த கூட்டத்தில் பேசப்பட்டு உள்ளது.

ராகுல் காந்தி குறித்து ஜி-23 தலைவர்கள் ஆதங்கம்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வந்தாலும், அதை மறைமுகமாக கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், ரந்தீப் சுர்ஜேவாலாதான் இயக்குகிறார்கள் என ஜி-23 தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போதைய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இல்லாவிட்டாலும் அவர்தான் அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும், எதையும் வெளிப்படையாக அவர் தெரிவிப்பது கிடையாது எனவும் அவர்கள் வேதனையை பகிர்ந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications