அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இவ்வளவுதான்.. செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல் பரபர வாதம்!
டெல்லி: செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளன. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சுங்க அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியாது, பிடித்து போலீசாரிடம் தான் ஒப்படைக்க முடியும் அதுதான் அமலாக்கத்துறைக்கும் என வாதங்களை அடுக்கி வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரியும் அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

ஐகோர்ட்டில் நடந்தது: இந்த வழக்கில் ஐகோர்ட்டின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதைத்தொடர்ந்து மூன்றாவது நீதிபதியான சிவி கார்த்திகேயன் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளித்தார். ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவரது மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் தாக்கல் செய்யப்பட்டது.
முடித்து வைப்பு: இதற்கிடையே, காவிரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை எத்தனை நாள் காவலில் எடுப்பது தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன், இப்போது இரு தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதுவும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்தார் நீதிபதி நிஷா பானு. தொடர்ந்து, வழக்கை முடித்து வைப்பதாக 2 நீதிபதிகளும் தெரிவித்தனர்.
இடையீட்டு மனு: இதற்கிடையே, போக்குவரத்து துறையில் ஆட்சேர்க்கைக்கு பணம் பெற்றதாக மனு தாக்கல் செய்த பிரதான மனுதாரர் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
செந்தில் பாலாஜி வழக்கை இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இந்நிலையில் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார்.
கபில் சிபல் வாதம்: "அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும்? சுங்கத்துறை அதிகாரியால் ஒருவரை கைது செய்ய முடியுமா என்றால் முடியாது.
சுங்க அதிகாரி சம்மந்தப்பட்ட நபரை பிடித்து காவல்துறையில்தான் ஒப்படைக்க முடியும்; அதுவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும்" என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்துள்ளார்.
-
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications