மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி விலை ரூ 100 குறைப்பு- சீரம் நிறுவனம்
டெல்லி: மாநிலங்களுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையில் சீரம் நிறுவனம் ஒரு டோஸிற்கு ரூ 100 குறைத்துள்ளது. அதாவது 25 சதவீதம் குறைத்துள்ளது.
பாரத் பயோ டெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்தன. இதையடுத்து சீரம் நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கோவிஷீல்டு எனும் தடுப்பூசியை தயாரித்தன.

இந்த இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இந்த நிலையில் இரு தடுப்பூசிகளின் விலைகளையும் அந்த நிறுவனங்கள் தாறுமாறாக உயர்த்தின. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மருந்து மாநில அரசுக்கு ரூ 400 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தடுப்பூசி விலையை குறைக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து ஏற்கெனவே மத்திய அரசும் சீரம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கான தடுப்பூசி ரூ 400-லிருந்து ரூ 300 க்கு குறைக்கப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications