"உ.பியிலும் பெட் இல்லை".. யோகி பேச்சுக்கு நேர்மாறாக சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் வாதம்!
டெல்லி: கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வாதாடிய அரசு சொலிசிட்டர் ஜெனரல், உத்தரப் பிரதேசத்திலும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில்லை, ஆக்சிஜன் கிடைப்பதில்லை என்று தெரிவித்தது உ.பி. அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
உபியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மருந்துகளுக்கும், ஆக்சிஜன், படுக்கைகளுக்கும் எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம்தான் கூறியிருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று கூறியதால் உ.பி. அரசுக்கு தர்மசங்கடமாகியுள்ளது.

கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன், ஹாத்ராஸ் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க வந்தபோது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி உ.பி. அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. தற்போது சித்திக் கப்பனுக்கு கொரோனா வந்துள்ளது. மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், கப்பனின் மனைவி ஆகியோர் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பெஞ்ச், கப்பனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றி தரமான சிகிச்சை அளிக்க உ.பி. அரசுக்கு அதிரடி உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பல்வேறு ஆட்சேபனைகளை எழுப்பி வாதிட்டார். கப்பன் மீது கடும் குற்றச்சாட்டுக்களையும் வைத்தார். கூடவே, உ.பியில் படுக்கைகள், மருந்துகளுக்கு பற்றாக்குறை இருப்பதையும் ஒப்புக் கொண்டார். அவரது ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் பலவற்றை பெஞ்ச் நிராகரித்து விட்டது.

துஷார் மேத்தா தனது வாதத்தின்போது முன்வைத்தவற்றிலிருந்து சில:
மதுரா சிறையில் 50க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா உள்ளது. மதுராவில் பலரும் உரிய படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உ.பியில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
டெல்லிக்கு கப்பனை இடம் மாற்றக் கூடாது. டெல்லியிலும் கூடத்தான் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதற்காக இத்தனை முக்கியத்துவம் தர வேண்டும். வரி கட்டுவோருக்கு கிடைக்க வேண்டிய வசதிகளை ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஏன் தர வேண்டும்.
கப்பனுக்கு தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. பெருமளவில் அவர் பணம் பெற்றுள்ளார். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபருக்கு சலுகைகள் தரக் கூடாது என்று வாதிட்டார் துஷார் மேத்தா.
அவரது வாதத்தின்போது பலமுறை குறுக்கிட்ட நீதிபதிகள் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டபோது இல்லை என்றுதான் துஷார் மேத்தா பதிலளித்தார். குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்யப்பட்ட இயக்கம் என்று துஷார் மேத்தா குறிப்பிட்டபோது, இப்போது அந்த தடை இருக்கிறதா என்று நீதிபதி கேட்டபோது, இல்லை என்றார் மேத்தா. அதேபோல கப்பன் வங்கிக் கணக்கில் தீவிரவாதிகள் பணம் செலுத்துவதாக துஷார் மேத்தா கூறியபோது, ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டபோதும் இல்லை என்றுதான் துஷார் மேத்தாவால் பதிலளிக்க முடிந்தது.
கேரள பத்திரிகையாளர் சங்கமெல்லாம் ஒரு ஆளா என்ற ரீதியில் துஷார் மேத்தா வாதம் வைத்தபோது, சங்கத்தை விடுங்க, கப்பனின் மனைவியே மனு கொடுத்துள்ளார் என்று நீதிபதிகள் குறுக்கிட்டு துஷார் மேத்தாவின் வாதத்தை அடக்கினர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications