Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுலுக்கு பதில் சசிதரூர்.. ரஷ்ய அதிபருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் நடந்த ட்விஸ்ட்.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்ட ராஷ்டிரபதி பவன் விருந்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்ற சசிதரூர் எம்பி, 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவாக்கிய புவிசார் அரசியல் ஒருங்கிணைப்பின்போது பேசிய வார்த்தை இன்று மிகவும் உண்மையாகிவிட்டது என்று பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து வைத்தார். இந்த விருந்தில் பொதுவாக மக்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பதில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசிதரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி உறுதியாக தகவல்கள் தெரியவரவில்லை. ஏனெனில் காங்கிரஸ் கட்சி தான் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தது.

Shashi Tharoor replaces Rahul at Russian President s dinner Watch video

அதேநேரம் கடந்த ஒரு வருடமாக பாஜக உடன் நெருக்கமான உறவில் உள்ள காங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூருக்கு ரஷ்ய அதிபருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட சசிதரூர், அமைச்சர் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் உள்பட பல்வேறு அமைச்சர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடிபடி விருந்தில் பங்கேற்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த விருந்தில் பங்கேற்றது தொடர்பாக என்டிடிவிக்கு சசிதரூர் எம்பி அளித்த பேட்டியில் கூறுகையில், நேற்று இரவு ராஷ்டிரபதி பவனில் தான் கலந்துகொண்டதற்கான காரணம், வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக நான் ஆற்றிய பணிகளே காரணம்.

நான் ஒரு இடைவெளிக்குப் பிறகு [ராஷ்டிரபதி பவனுக்கு] திரும்பி வந்துள்ளேன். சில ஆண்டுகளாக அவர்களுக்கு (ஆளும் கட்சிக்கு) வேறு விதமான எண்ணங்கள் இருந்ததாக நினைக்கிறேன். இந்த முறை அவர்கள் மற்ற குரல்களுக்குச் சற்று அதிக இடமளிக்க முடிவு செய்திருப்பதாக நினைக்கிறேன்.. வெளிநாடுகளுடனான உறவுகள்தான் நாடாளுமன்ற நிலைக்குழு கையாளும் விஷயம் என்பதால், அங்கு நடக்கும் உரையாடல்கள், சூழ்நிலை மற்றும் பலவற்றைப் பற்றிப் புரிந்துகொள்வது உதவியாக இருக்கும். அதனால், நான் இங்கே இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வளவுதான். அந்த விருந்து மிகவும் சிறப்பானது என்றார்.

முன்னதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோருக்கு விருந்துக்கு அழைப்பு விடுக்காதது குறித்து பவன் கேரா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உட்படப் பல காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் தரூர் பேசியபோது, தனக்கு அழைப்பு வந்திருப்பதை உறுதிப்படுத்தினார். இரண்டு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் விருந்தினர் பட்டியலில் இல்லாதது பற்றிய கேள்விக்கு, அழைப்புகள் எந்த அடிப்படையில் அனுப்பப்பட்டன என்பது தனக்குத் தெரியவில்லை என்றும், ஆனால் தான் அழைக்கப்பட்டது நிச்சயமாக தனக்குக் கிடைத்த மரியாதை என்றும் அவர் பதிலளித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது தொகுதி நலனுக்காக மத்தியில் உள்ள பாஜக அரசுடன் ஒத்துழைத்துச் செயல்படுவது குறித்த கேள்விக்கு, "அது "வேறு விஷயம்... ராஷ்டிரபதி பவன் விருந்துக்கு அழைப்பைப் பெறுவதற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், ஆளும் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது என்ற விஷயத்தில், நீங்கள் உங்கள் நம்பிக்கைகளையோ அல்லது கொள்கைகளையோ கைவிட முடியாது, ஆனால் நீங்கள் பொதுவான தளத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். ஜனநாயகத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான ஒத்துழைப்பு பொது இடங்களில் இருக்க வேண்டும். சில விஷயங்களில் நாங்கள் உடன்படுவதில்லை, சில விஷயங்களில் உடன்படுகிறோம். நாங்கள் உடன்படும் இடங்களில் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார்.

அண்மையில் ஆபரேஷன் சிந்துர் பற்றி மற்ற நாடுகளுக்குத் தெரிவிக்க மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட குழுவில் தரூர் ஒருவராக இருந்தார். எதிர்க்கட்சித் தலைவரை அழைக்க வேண்டிய போதெல்லாம் அரசாங்கம் இவரைத் தேர்ந்தெடுப்பது, அவரது சொந்தக் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சசிதரூர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளது.

இதுபற்றி பேசிய சசிதரூர், "ஏன் இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. நான் பெரும் சிரமத்திற்குப் பிறகுதான் தேர்வானேன். எனவே நன்கு யோசித்தே இந்த விஷயத்தில் செயல்படுவேன்.. என்னை நம்பி வாக்களித்த வாக்காளர்களுக்காக செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளது. அதை நிறைவேற்ற எனன்னால் முடிந்தவரை முயற்சிப்பேன். இன்றுகூட நாங்கள் அனைவரும் இரவு உணவுக்கு அமரும் முன் பேசும் போது, நமது அரசு அதிகாரிகளிடம் எனது தொகுதிக்குத் தேவையான சில விஷயங்களைப் பேச முயற்சித்தேன். அதுதான் நான் என் மக்கள், வாக்காளர்கள் மற்றும் என் தொகுதிக்குச் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். அதுதான் அரசியல் பொறுப்பு," இவ்வாறு சசி தரூர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+