பாஜகவிற்கு குட்பை? அதிரடி பேச்சுக்கு பெயர் போன ஷெசாத் பூனாவாலா பதவி விலகல்? பயோவில் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக சார்பில் அதிரடி பேச்சுக்கு பெயர் பெற்ற ஷெஹ்சாத் பூனாவாலா திடீரென்று அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வந்த நிலையில் திடீரென்று தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து பாஜகவின் பெயரை நீக்கி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜகவில் அதிரடியான பேச்சுகளுக்கு பெயர் பெற்றவர்களில் ஒருவர் ஷெஹ்சாத் பூனாவாலா. இவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் விவாதங்களில் பங்கேற்று எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ், திமுக பிரதிநிதிகள் உள்பட பலருடன் இவர் விவாதம் நடத்தி கவனம் ஈர்த்தவர்.

shehzad poonawala bjp

பாஜகவில் தேசிய செய்தி தொடர்பாளராக ஷெஹ்சாத் பூனாவாலா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் தனது எக்ஸ் பக்கத்தின் முகப்பு பக்கத்தில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் என்பதை நீக்கி உள்ளார்.

புதிய முகப்பு பக்கத்தில் மதம் - இஸ்லாம், கலாசாரம் - இந்து, சித்தாந்தம் பாரதியா, எஎஸ்டி கி யாத்ரா புத்தகத்தின் ஆத்தர், வாழ்நாள் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியின் பின்தொடரும் நபர் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் என்பதை அவர் நீக்கி உள்ளார்.

இதனால் அவர் பாஜகவில் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தனிப்பட்ட காரணங்களுக்காக ஷெஹ்சாத் பூனாவாலா பாஜகவில் இருந்தே விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுபற்றி ஷெஹ்சாத் பூனாவாலா அல்லது அவரது சார்பில் இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் ஷெஹ்சாத் பூனாவாலாவின் முடிவில்

ஷெசாத் பூனாவாலா மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த 2017 ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் உள்கட்சி தேர்தல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்கும் வகையில் மேலிடம் செயல்படுவதாக குற்றம்சாட்டி கட்சியில் இருந்து விலகினார். அதன்பிறகு பாஜகவில் சேர்ந்தார்.

இவரது சகோதரர் தெஹ்சின் பூனவாலா. இவரும் பிரபலமானவர் தான் தெஹ்சின் பூனவல்லா அரசியல் விமர்சகராக உள்ளார். இவர் பாஜகவுக்கு எதிரான கொள்கை கொண்டவர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். தெஹ்சின் பூனவாலா இவர் தான் இன்று டெல்லியில் மத்திய அரசின் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+