Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருதய கோளாறால் உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Sheila Dikshit passed away | இருதய கோளாறால் அவதிப்பட்ட ஷீலா தீட்சித் காலமானார்

    டெல்லி: டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இருதய கோளாறால் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

    ஷீலா தீட்சித் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் அன்பு மகளாக திகழ்ந்த ஷீலா தீட்சித் அவர்கள் மறைவு பற்றிய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். 3 முறை டெல்லி முதல்வராக தன்னலமின்றி பணியாற்றி ஷீலா தீட்சித்தின் குடும்பத்தினர் மற்றும் டெல்லி குடிமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார் ராகுல்.

    Sheila Dikshit the respected leader beyond the parties .. Rajnath Singh condolences

    ஷீலா தீட்சித் ஜி காலமானதைப் பற்றிய மிக பயங்கரமான செய்திகளைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உள்ளேன் ஷீலா தீட்சித் மறைவு டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பு. அவரது பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். ஷீலா தீட்சித்தின் ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்

    நான் சமீபத்தில் தான் ஷீலா தீட்சித்தை சந்தித்தேன், அப்போது ஒரு தாயைப் போல என்னை எப்படி வரவேற்றார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அதற்குள் அவர் மறைந்து விட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த இழப்பை தாங்க கூடிய சக்தியை அவரது உறவினர்கள் மட்டும் நண்பர்களுக்கு கடவுள் பலத்தைத் தரட்டும் என பாஜக எம்.பியும் அக்கட்சியின் டெல்லி மாநில தலைவருமான மனோஜ் திவாரி வருத்தம் தெரிவித்துள்ளார்

    டெல்லி முன்னாள் முதல்வர் மறைந்தது தமக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார் ஷீலா தீட்சித் மிக உயர்ந்த காங்கிரஸ் தலைவராக திகழ்ந்தார் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்ட தலைவராகவும் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொள்கிறேன் ஓம் சாந்தி என கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+