'நீங்க அவ்ளோ நல்லவங்கனா ஏன் அர்னாப் மீது கேஸ் போடல?' - பாஜகவை விளாசிய சிவசேனா
டெல்லி: ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் பேசிய அர்னாப் கோஸ்வாமி மீது பாஜக ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
டிஆர்பி கணக்கீடு குறித்த பிரச்சனையின் தொடர்ச்சியாக, BARC அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த பார்தோ தாஸ்குப்தா மற்றும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஆகிய இருவரின் வாட்ஸ் அப் உரையாடல் என்பதாக அறியப்படும் சில Chat-கள் சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக, புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம், தமது ரிபப்ளிக் டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு கிடைத்த சரியான வாய்ப்பாக அமைந்ததாக அர்னாப் கூறுவது போல் அந்த சாட் அமைந்திருந்தது.
இதுகுறித்து சிவசேனா தனது சாமனா பத்திரிகையில், "தாண்டவ் வெப் சீரிஸ் தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாஜக தலைவர்கள் வழக்குகளை பதிவு செய்தது சரி தான்; அதேசமயம், அவர்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்களாக இருந்தால், 'இந்திய வீரர்களின் தியாகத்தை அவமதித்த' அர்னாப் கோஸ்வாமி மீதும் வழக்குகளை பதிவு செய்திருக்க வேண்டும்" என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
100 கிராம் கஞ்சாவுடன் யாராவது பிடிபட்டால் ஊடகங்கள் பரபரப்பான விவாதங்களை உருவாக்கும். அதே வேளையில், கோஸ்வாமியின் தேசத் துரோகச் செயல் குறித்து விவாதங்களை நடத்த ஊடகங்கள் தயாராக இல்லை என்றும் சிவசேனா விமர்சித்துள்ளது.
முன்னதாக, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அர்னாப் கோஸ்வாமியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
டிஆர்பி-காக இதுபோன்ற தனது கேவலமான செயல்பாடுகளை நினைத்து அவர் வெட்கப்பட வேண்டும் என்றும் இனிமேலும் இது தொடரக் கூடாது என்றும் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications