6.1% கிடையாது வெறும் 5%தான்.. 2019-2020 மொத்த ஜிடிபி மேலும் குறையும்.. ஆர்பிஐ அதிர்ச்சி கணிப்பு!
2019-2020 மொத்தம் ஜிடிபி மேலும் குறையும், முன்பு கணிக்கப்பட்டு இருந்த 6.1% ஜிடிபியில் இருந்து வெறும் 5%தான் ஜிடிபி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2019-2020 மொத்தம் ஜிடிபி மேலும் குறையும், முன்பு கணிக்கப்பட்டு இருந்த 6.1% ஜிடிபியில் இருந்து வெறும் 5%தான் ஜிடிபி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஜிடிபி 4.5% ஆக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஆகும் இது. கடந்த காலாண்டிற்கான ஜிடிபி ஏற்கனவே 5% என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே 6 ஆண்டுகளில் மிக குறைவான ஜிடிபி ஆகும்.
இப்படி தொடர்ந்து ஜிடிபி சரிந்து வருவது எல்லோரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அரசு இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் திணறி வருகிறது.

என்ன கணிப்பு
இந்த நிலையில் இந்த மொத்த ஆண்டின் ஜிடிபி குறித்து தற்போது ஆர்பிஐ கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தற்போது பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதனால் ரெப்போ விகிதத்தை மேலும் குறைக்கும் எண்ணம் இல்லை. போதுமான அளவிற்கு ரெப்போ விகிதம் ஏற்கனவே குறைக்கப்பட்டுவிட்டது.

இனி மாட்டோம்
இனி அதை குறைக்க மாட்டோம். ரெப்போ வட்டி விகிதம் 5.15% என்பதிலேயே நீடிக்கும். அதில் இப்போது மாற்றம் எதுவும் செய்ய மாட்டோம், என்று ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துக் கொண்டே வந்தது. இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பலன் இல்லை
ஆனால் இது பெரிய அளவில் பலன் தரவில்லை. இந்த நிலையில் 2019-2020 மொத்தம் ஜிடிபி மேலும் குறையும், முன்பு கணிக்கப்பட்டு இருந்த 6.1% ஜிடிபியில் இருந்து வெறும் 5%தான் ஜிடிபி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மிக மோசம்
முதல் இரண்டு காலாண்டுகளின் ஜிடிபி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் மொத்த நிதி ஆண்டின் ஜிடிபி மேலும் சரியும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பொதுமக்கள், நிறுவனங்கள் என எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

எங்கு சரிவு
முக்கிய தொழிற்துறையில், மூலதன துறையில் இதனால் பெரிய சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. விவசாயத்துறையில் உற்பத்தி குறைந்தது, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் நிலவும் சரிவு, இதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications