கர்ப்பிணி.. அதைவிட மாற்று திறனாளி.. கொடூரமாக தாக்கி உதைத்த கும்பல்.. டெல்லியில் பெரும் பரபரப்பு

கர்ப்பிணியை கும்பல் ஒன்று தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "பச்சை குழந்தைங்களை கடத்தவா பார்க்கிறே" என்று சந்தேகப்பட்டு, மாற்றுத் திறனாளி (காது கேட்காத, வாய் பேச முடியாத) பெண் ஒருவரை அடித்து துவம்சம் செய்துள்ளது ஒரு கும்பல். இத்தனைக்கும் அந்த பெண் ஒரு கர்ப்பிணி என்பது உச்சக்கட்ட சோகம்!

சில தினங்களாகவே உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த வதந்தி மக்களிடம் தீவிரமாக பதிந்துவிட்டது. அதனால் போன வாரம்கூட, பல நபர்கள் கொண்ட கும்பல் தாக்குதலுக்கு ஆளானார்கள்.

இப்படியெல்லாம் வதந்திகளை பரப்பினால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில காவல்துறை எச்சரிக்கையும் செய்திருந்தது. ஆனாலும் ஒருசிலர் இதை காதிலே போட்டுக் கொள்ளவில்லை.

மாற்றுதிறனாளி

மாற்றுதிறனாளி

வடகிழக்கு டெல்லியில் திரும்பவும் ஒரு கொடூரம் நடந்துள்ளது. மாற்றுத் திறனாளி பெண் அவர்.. 4 மாத கர்ப்பிணியும்கூட.. ஃபரீதாபாதில் தன் கணவருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் ஏதோ தகராறில் கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிளாட்பாரம்

பிளாட்பாரம்

எங்கு போவது என்று தெரியாமல், டெல்லியில் உள்ள ஹர்ஷ் விஹார் என்ற பகுதிக்கு வந்தார். அங்கு பிளாட்பாரத்தில்தான் இப்போதைக்கு தங்கி உள்ளார். கர்ப்பிணி பெண் என்பதாலும், மாற்றுதிறனாளி என்பதாலும், அங்குள்ளவர்கள்தான் பரிதாபப்பட்டு சாப்பாடு தந்து வந்துள்ளனர்.

தாக்குதல்

தாக்குதல்

ஆனால் அந்த பெண், குழந்தை கடத்துபவராக இருக்கும் என்று ஒரு கும்பல் சந்தேகித்துள்ளது. கடந்த 27-ஆம் தேதி அந்த பெண்ணை எல்லைமீறி தாக்கியும் உள்ளனர். பலவீனமான அந்த பெண்ணினால், பலம் கொண்டு தாக்குபவர்களை எதிர்க்க முடியவில்லை. மனசாட்சியே இல்லாமல் பெண்ணை தாக்குவதை யாரோ வீடியோ எடுத்து இணையத்தில் போடவும், அது வைரலாகி பலரது அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளது. அப்போதுதான் துக்ளகாபாதில் உள்ள அப்பெண்ணின் குடும்பத்தினர் வீடியோ பார்த்து போலீசுக்கு பதறியடித்து ஓடினர்.

உறுதி

உறுதி

இப்போது அந்த பெண் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணை தாக்கிய அந்த கயவர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. இருந்தாலும் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என்று காவல்துறை துணை ஆணையர் அதுல்குமார் தாக்கூர் உறுதி தந்துள்ளார்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+