துபாய் பாணியில் இந்தியாவில் ஷாப்பிங் திருவிழா.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
Recommended Video
டெல்லி: துபாய் பாணியில் ஆண்டுதோறும், இந்தியாவில், ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளச் சூழ்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

6 வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிவடைந்துள்ள சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு பொருளாதார ஊக்க, நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். துபாய் போலவே இந்தியாவில் மெகா ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தி இதற்காக ஊக்கம் தரப்படும். பெரிய அளவிலான கொள்முதல் மற்றும் தொழில் இணைப்பு திட்டங்களுக்கு இது உதவும்.
Non-Tariff தடையை சீராக்கவும், நமது ஏற்றுமதியாளர்களுக்கு தரச்சான்று வழங்கவும், பிபிபி நடைமுறையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.
உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை உதவும்.
ஷாப்பிங் திருவிழாக்கள் நடைபெறும் நான்கு இடங்கள் எவை என்பதை, வர்த்தக அமைச்சகம் தீர்மானிக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications