Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எண்ட் கார்டு போட்ட பிறகும்.. மீண்டும் இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா! அதென்ன XBB1.16? ஏன் ஆபத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு XBB1.16 வகை கொரோனாவே காரணமாக இருக்கிறது.

கடந்த 2019இல் சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றியது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு 2020இல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோன வைரஸ் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளை நாம் முழுமையாக இழந்தோம். ஒட்டுமொத்த உலகமே ஊரடங்கு காரணமாக முடங்கிப் போனது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எந்தவொரு நாடும் இதில் இருந்து தப்பவில்லை.

 கொரோனா

கொரோனா

இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் இது ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் இன்னுமே மோசம். இதனால் ஏற்படும் வேலையிழப்புகளை இப்போதும் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அந்தளவுக்கு கொரோனா நம்மை ஒரு வழி செய்துவிட்டது. தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை, கொரோனா வேக்சின் என்று பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு, கொரோனா பாதிப்பு தான் கட்டுக்குள் வந்தது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் குறைந்த அளவிலேயே வைரஸ் பாதிப்பு பதிவானது.

 மீண்டும் அதிகரிப்பு

மீண்டும் அதிகரிப்பு

இதற்கிடையே இப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3095 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 15,208ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மற்றும் கோவாவில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு 123ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளது.

 XBB1.16 கொரோனா

XBB1.16 கொரோனா

தலைநகர் டெல்லியில் 295 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டும் 12.48%ஆக உள்ளது. டெல்லியில் இப்போது XBB1.16 வகை கொரோனா பரவும் நிலையில், இதன் கரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும் கூட ஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் தான் இருக்கிறது என்றும் இதனால் மக்கள் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 மிக வேகம்

மிக வேகம்

நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக இருக்கும் இந்த XBB1.16 வகை கொரோனா குறித்துப் பார்க்கலாம். இந்த உருமாறிய கொரோனா முதலில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. இதனால் சில இடங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் தலா 164 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதைத் தொடர்ந்து தெலுங்கானா 93 பேருக்கும் கர்நாடகாவில் 86 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. இந்த XBB1.16 மிக வேகமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது என்ற போதிலும் இதனால் தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

 ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

மேலும், இரண்டு டோஸ் வேக்சின் போட்ட பிறகும் கூட இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது நாடு முழுக்க கண்டறியப்படும் கொரோனா நோயாளிகளில் அதிகப்படியானோருக்கு இந்த வகை பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா முடிந்துவிட்டதாகப் பலரும் தெரிவித்தனர். அதற்கேற்ப மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். இந்தச் சூழலில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் எங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும், அதற்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு.

 ஆபத்தா

ஆபத்தா

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "XBB1.16 வேரியண்ட் என்பது ஓமிக்ரான் துணை வேரிண்ட் தான. மேலும் இது மிக வேகமாகப் பரவினாலும் கூட இதனால் தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இது மோசமான அறிகுறிகளையும் ஏற்படுத்துவது இல்லை. இது பெரும்பாலும் இருமல் மற்றும் சளியுடன் லேசான காய்ச்சலை ஏற்படுத்துகிறது. 100 நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே மருத்துவ உதவி தேவைப்படும். ஆனால், இது பரவும் வேகமே நமக்குக் கவலை தருகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+