Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாலத்தீவில் ‛சிக்ஸ்பேக்’கில் ரிங்குசிங்! சுப்மன் கில் சகோதரி சொன்ன அந்த வார்த்தை! அப்போ அதுவா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மாலத்தீவு சென்றுள்ளார். இந்நிலையில் தான் ரிங்கு சிங்குவை பார்த்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரரான சுப்மன் கில்லின் சகோதரி ஷாநீல் கூறிய வார்த்தை தற்போது பல்வேறு யூகங்களை கிளப்பி ஹாட்டாபிக்காக மாறி வருகிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்னாக ஜொலித்தவர் ரிங்கு சிங். இவர் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 474 ரன்கள் குவித்தார். 5வது அல்லது அதற்கு அடுத்தபடியாக களமிறங்கி அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் ரிங்கு சிங் தான் முதல் இடத்தில் உள்ளது.

Shubman Gills sister sahahneel comments on Rinku singhs Maldives photo in Instagram

இந்த சீசனில் ரிங்கு சிங்கின் சராசரி என்பது 59.25 என்ற அளவில் உள்ளது. மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150.22 என இருக்கிறது. இந்த சீசனில் 4 அரைசதங்களை அடித்த ரிங்கு சிங் பல போட்டிகளில் தனி ஆளாக கொல்கத்தா அணியை கரை சேர்த்தார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் லீக் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார் ரிங்கு சிங். இதன்மூலம் இந்த சீசனில் ரிங்கு சிங் மிகவும் பிரபலம் ஆனார். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கும் அவர் விரைவில் அழைக்கப்படலாம். தற்போது அவருக்கு 25 வயது மட்டுமே ஆகும் நிலையில் நீண்டகாலம் அவர் இந்தியாவின் பினிசராக வலம் வர வாய்ப்புள்ளது என கிரிக்கெட் வர்ணணையாளர்கள் கணித்துள்ளனர்.

அதேபோல் இந்த ஐபிஎல் சீசனில் ஜொலித்து அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் சுப்மன் கில். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சுப்மன் கில் 17 போட்டிகளில் மொத்தம் 890 ரன்கள் குவித்தார். மொத்தம் 3 சதம், 4 அரைசதம் அடித்தார். இந்த சீசனில் ஹைதரபாத், பெங்களூர், மும்பை அணிக்கு எதிராக அவர் சதமடித்து அசத்தினார்.

Shubman Gills sister sahahneel comments on Rinku singhs Maldives photo in Instagram

குறிப்பாக லீக் சுற்றின் கடைசி போட்டியில் குஜராத் அணியும், பெங்களூர் அணியும் மோதின. குஜராத் அணி பிளேஆப் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் பெங்களூர் அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கும் முன்னேறும் நிலை இருந்தது. ஆனால் ஆனால் சுப்மன் கில் தனி ஆளாக நின்று சதமடித்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் குஜராத் அணியை வெற்றி பெற வைத்தார்.

இதனால் பெங்களூர் அணி வெளியேறியது. இதனால் கோபமடைந்த விராட் கோலியின் ரசிகர்கள் சுப்மன் கில்லின் சகோதரி ஷாநீல்லை கடும் வார்த்தைகளால் ஆபாசமாக விமர்சனம் செய்தனர். சுப்மன் கில் பெங்களூர் அணியின் கோப்பை கனவை தகர்த்ததால் ரசிகர்கள் அவரது சகோதரி ஷாநீல்லை திட்டி தீ்ர்த்தனர். இது சர்ச்சையை கிளப்பியது. மேலும் மகளிர் ஆணையம் இந்த விஷயத்தில் தலையிட்டது. இதன்மூலம் தான் சுப்மன் கில்லின் சகோதரி ஷாநீல் வெளியுலகிற்கு தெரியவந்தார்.

இதற்கிடையே தான் தற்போது ஷாநீல் ரிங்கு சிங்கை பார்த்து சொன்ன கமெண்ட் விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் நிலையில் அதுதொடர்பான போட்டோக்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் பதிவிட்ட போட்டோ ஒன்று ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. அதாவது ரிங்கு சிங் தனது ஒரு கையில் கையில் டாட்டூ, சில்வர் கைசெயின் அணிந்து வண்ணமயமான ஷார்ட்ஸ் அணிந்து இருந்தார். மேலும் உடலில் சட்டை அணியாமல் ‛சிக்ஸ்பேக்கை' காட்டும் வகையில் ரிங்கு சிங் போட்டோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

Shubman Gills sister sahahneel comments on Rinku singhs Maldives photo in Instagram

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அதனை லைக் செய்தனர். இந்த படத்துக்கு சுப்மன் கில்லின் சகோதரி ஷாநீல் லைக் செய்ததோடு, அவர் கூறிய கமெண்ட் தான் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. அதாவது ரிங்கு சிங்கின் போட்டோவுக்கு ஷாநீல், ‛ஓ ஹீரோ' என கமெண்ட் செய்தார். இதுதான் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது ரிங்கு சிங்குக்கும், ஷாநீல்லுக்கும் என்ன உறவு இருக்கும்? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் இருவரையும் சேர்த்து வைத்து காதல் கிசுகிசு பரவ தொடங்கி உள்ளது.

ஆனால் உண்மை என்பது முற்றிலும் வேறாக உள்ளது. சுப்மன் கில்லின் தங்கை ஷாநீல் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங்குடன் தொடர்ந்து தோழியாக இருக்கிறார். இந்த தோழமையின் வெளிப்பாடாக தான் ஷாநீல், ‛ஓ ஹீரோ' என ரிங்கு சிங்கின் போட்டோவுக்கு கமெண்ட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+