Saina Nehwal குறித்து அவதூறு ட்வீட்.. நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறதா?
டெல்லி: பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு ட்வீட் போட்ட நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

தமிழில் பாய்ஸ் படங்கள் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். இவர் ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சித்தார்த் அண்மைக்காலமாக மத்திய அரசையும் அதை ஆதரிப்பவர்களையும் கண்டித்து ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவரது ட்வீட்டுகள் பெரும் தாக்கத்தையும் கண்டனங்களையும் ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

பஞ்சாப் வருகை
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடி குறித்து கட்சிக்கு அப்பாற்பட்டு நிறைய பேர் கண்டனம் தெரிவித்தார்கள். அது போல்தான் பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் பிரதமரின் பாதுகாப்பிலேயே சமரசம் செய்யப்பட்டால் இந்த நாட்டில் யாரும் பாதுகாப்பாக இருப்பதாக சொல்ல முடியாது.

அராஜகம்
பிரதமர் நரேந்திர மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் சித்தார்த் பாலியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்தை ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. எம்பி பிரியங்கா சதுர்வேதி, பாடகி சின்மயி, நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ரேகா சர்மா
இதற்கு நடிகர் சித்தார்த், தான் எந்த கருத்தையும் தரக்குறைவாக சொல்லவில்லை. அவமரியாதை செய்யும் நோக்கத்தில் எதையும் சொல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் கூறிய கருத்துகளை தேசிய மகளிர் ஆணையம் பார்த்தது.

பெண்களின் கண்ணியம்
சமூகவலைதளங்களில் பெண்களின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் மூர்க்கத்தனமான கருத்தாகவே சித்தார்த்தின் கருத்து பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தானாக வந்து வழக்குப் பதிவு செய்கிறது தேசிய மகளிர் ஆணையம். சமூகவலைதளங்களில் பெண்களுக்கு எதிராக முறையற்ற ஆபாச வார்த்தைகளை பதிவிட்ட நடிகர் சித்தார்த்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ட்விட்டர் கணக்கு முடக்கம்?
இது போல் அவர் ஆபாசமாக பதிவிட்டதற்கு அவரது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என ரேகா சர்மா கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்தார்த்தை எதிர்த்தும் சாய்னாவுக்கும் ஆதரவாகவும் சமூகவலைதளங்களில் குரல்கள் எழுந்துள்ளன. எனவே அவரது ட்விட்டர் கணக்கு சிறிய காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என்றே தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications