ஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத குழுவை சேர்ந்த தீவிரவாதிகள் கர்நாடகாவிலும், கேரளாவிலும் இருப்பதாக ஐநா வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகம் முழுக்க இருக்கும் தீவிரவாத அமைப்புகள் குறித்து ஐநா தனது ஆய்வு குறிப்புகள் மற்றும் அறிக்கைகளை வருடாவருடம் வெளியிடும். உலகம் முழுக்க ஐஎஸ்ஐஎஸ், முஜாகிதீன் அமைப்பு எங்கு செயல்படுகிறது, புதிய அமைப்புகள் எங்கு இருக்கிறது என்பது என்பது தொடர்பாக விவரங்களை இந்த அமைப்பு வெளியிடும்.
ஐநாவின் "Analytical Support and Sanctions Monitoring Team" சார்பாக வருடா வருடம் இந்த அறிக்கை வெளியாகும். இதன் 26வது அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்தியா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது .

என்ன சொல்கிறது
அந்த அறிக்கையில் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் தீவிரவாதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் அல் கொய்தா அமைப்பு உடனும் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள்.

எங்கு இருக்கிறார்கள்
மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய பகுதிகளில் அதிக தீவிரவாதிகள் உள்ளனர். இங்கு முக்கியமாக 200 தீவிரவாதிகளுக்கும் அதிகமானோர் இருக்கிறார்கள். இவர்கள் அவர்கள் இருக்கும் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்தியாவில் அல் கொய்தா அமைப்பு தாலிபான் குடைக்கு கீழ் இயங்குகிறது.

அதிகம் உள்ளனர்
நிம்ரூஸ், ஹெல்மாண்ட், கந்தஹார் ஆகிய பகுதிகளில் இருந்து இவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் ஐஎஸ் அமைப்பில் மட்டும் மே 10ம் தேதி 2019 கணக்குப்படி 180-200 தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பலர் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஏன் இப்படி
இந்தியாவில் இவர்கள் சில இடங்களில் புதிய கிளைகளை தொடங்கி உள்ளனர் என்றும் கூறுகிறார்கள். இந்த ஐஎஸ்ஐஎஸ் பிரிவிற்கு இவர்கள் வாலியா ஆப் ஹிண்ட் என்று பெயர் வைத்துள்ளார். இந்த அமைப்பின் தலைவராக ஒசாமா மஹ்மூத் இருக்கிறார். முன்னாள் இந்திய ஐஎஸ் தலைவர் அசிம் உமர் கொலைக்கு பழி வாங்க இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
-
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications