Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீக்கியர்கள் பிரிவினைவாதியா? NCERT புத்தகத்தால் கிளம்பிய புது சர்ச்சை.. சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய புத்தகங்கள் அடுத்தடுத்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. இதனிடையே சீக்கியர்கள் குறித்து இதில் இருக்கும் கருத்துகளுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வரும் கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு புத்தங்களை வெளியிட்டுள்ளது. இப்போது இருக்கும் புத்தங்களில் இருக்கும் சில தகவல்களைக் காலத்திற்கு ஏற்ப மாற்றியுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இருப்பினும், இந்த புத்தகங்கள் வெளியானது முதலே பலரும் அதை விமர்சித்தே வருகின்றனர். அதன் வரலாறு பாடத்தில் முகலாய பேரரசு பற்றிய பாடத்தை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

 Sikhs objects to Anandpur Sahib resolution being dubbed as ‘separatist’ document in NCERT books

போலிடிக்கல் சயின்ஸ் புத்தகத்தில் 1973இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் "பிரிவினைவாத தீர்மானம்" என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சீக்கிய அமைப்புகள் விமர்சித்துள்ளனர்.

'சுதந்திர பாரத் மே ராஜ்நிதி' என்ற புத்தகத்தின் 7வது அத்தியாயத்தில் பிராந்திய சுயாட்சி கோரிக்கை எழுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் மேலும், "மத்திய-மாநில உறவுகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. கூட்டாட்சி முறையை வலுப்படுத்த வேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. இருப்பினும், தனி சீக்கிய நாட்டிற்கான கோரிக்கையாகவும் இதை நாம் புரிந்து கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது

இதற்குச் சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) உள்ளிட்ட பல சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து எஸ்ஜிபிசி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறுகையில், "சீக்கியர்கள் குறித்துப் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். சீக்கியர்கள் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. சீக்கியர்களைப் பிரிவினைவாதிகளாகக் காட்டக்கூடாது. அந்த வாசகத்தை உடனடியாக நீக்க வேண்டும்'' என்றார்.

2023-24 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு போலிடிக்கல் சயின்ஸ் புத்தகத்தில் மகாத்மா காந்தி, இந்து-முஸ்லீம் ஒற்றுமை மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றிய பல கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாமி மேலும் கூறுகையில், "இந்த கருத்துகளை எல்லாம் அகற்றுவது வகுப்புவாத செயல். மத்திய அரசு தனது சொந்த நலன் கருதி இந்த மாற்றங்களைச் செய்வது வருத்தமளிக்கிறது. சிறுபான்மையினர் பற்றிய வாசகங்கள் நீக்கப்படுகின்றன. இது திட்டமிடப்பட்ட சதி" என்றார்.

ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் குறித்துப் பேசிய அவர், "இந்தத் தீர்மானம் ஒரு வரலாற்று ஆவணம். அதில் ஒன்றும் தவறில்லை. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்பதையே அது வலியுறுத்துகிறது. துரதிர்ஷ்டவசமாக, இப்போதும் அதே நிலை நிலவுகிறது. மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

"இந்து ராஷ்டிராரம்" கோருபவர்களுக்குச் சாதகமாக இவை இருப்பதாகத் தெரிகிறது. மறுபுறம், சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக இத்தகைய கருத்துக்களை உருவாக்குவதன் மூலம் அவர்களுக்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+