SIR படிவங்களை வழங்க கால நீட்டிப்பு? தமிழக கட்சிகள் கோரிக்கை.. டிச 11ல் உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை கேட்ட உச்சநீதிமன்றம் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. நாளை மறுநாள் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இதனால் இந்த வழக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR or Special Intensive Revision) பணி நடந்து வருகிறது. பீகாரை தொடர்ந்து சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் யூனியன் பிரதேசங்களான அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த பணி நடந்து வருகிறது.

கடந்த மாதம் 4ம் தேதி இந்த பணி தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான விண்ணப்பங்களை வழங்க டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு டிசம்பர் 16ம் தேதி வெளியிடப்படும். பிறகு பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.
இந்நிலையில் தான் தமிழகத்தில் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, மதிமுக, தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று அசாமில் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு மற்றும் கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையில் காலஅவகாரத்தை நீட்டிக்க கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வேளையில் தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான கணக்கீட்டு படிவங்களை திரும்ப வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட உச்சநீதிமன்றம் தமிழக அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளை மறுதினம் விசாரிப்பதாக தெரிவித்தது. நாளை மறுநாள் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கான கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். இதனால் இந்த வழக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications