கொரோனாவில் மரணமடைந்த ஆஷிஷ் யெச்சூரி - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஷிஷின் துயர மற்றும் அகால மறைவுக்கு சீதாராம் யெச்சூரி அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
டெல்லி அருகே குருகிராம் தனியார் மருத்துவமனையில் ஆஷிஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஆஷிஷ் இறந்தது வேதனை அளிப்பதாக சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீதாராம் யெச்சூரி மகனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆஷிஷின் துயர மற்றும் அகால மறைவுக்கு சீதாராம் யெச்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மகனை இழந்து வாடும் தோழர் யெச்சூரிக்கு இந்த சோகத்தை தாங்கும் வலிமையை இயற்கை வழங்கட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. இது தோழர் யெச்சூரிக்கு தாங்க முடியாத இழப்பு. அவருக்கு எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
-
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications