ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன் - மு.க. ஸ்டாலின் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனாவால் மரணமடைந்துள்ளார் அவருக்கு வயது 34. ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
டெல்லி அருகே குருகிராம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆஷிஷ் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது மூத்த மகன் ஆஷிஷ் இறந்தது வேதனை அளிப்பதாக சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீதாராம் யெச்சூரி மகனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஆஷிஷ் யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பினராயி விஜயன் தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.

இதே போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆஷிஷ் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று மு.க ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications