டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேடார் குறித்து பிரதமரின் பேச்சு அபத்தமாக உள்ளது.. சீதாராம் யெச்சூரி விமர்சனம்

Google Oneindia Tamil News

டெல்லி: மேகங்களால் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து இந்திய விமானங்கள் தப்பிவிடும் என பிரதமர் மோடி பொறுப்பற்ற வகையில் பேசுவதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படையினர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார், அப்போது அவர் கூறுகையில் திட்டமிட்ட நாளில் வானிலை மோசமாக இருந்ததால் வேறு நாளில் தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் 'தெறி'சர்ச்சை 1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் 'தெறி'சர்ச்சை

சர்ச்சை

சர்ச்சை

ஆனால் மேகங்களால் இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடும் என்பதால் தாக்குதல் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டது என மோடி கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொறுப்பற்ற முறை

பொறுப்பற்ற முறை

இதுகுறித்து சீதாராம் யெச்சூர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ரேடார்கள் குறித்து பிரதமர் மோடி அபத்தமாகவும் கேலிக்குரிய வகையிலும் பேசியுள்ளார். 6-ஆவது கட்ட தேர்தல் நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அவர் பாதுகாப்பு படைகள் குறித்து இவ்வாறு கூறியுள்ளதால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் விதிமீறல்

இது முற்றிலும் விதிமீறல். எனவே மோடி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பை கவனக்குறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மோடியிடம் இருந்து இது போன்ற பொறுப்பற்ற கருத்துகள் மிகவும் ஆபத்தானவை. இது போல் பொறுப்பற்றவர்கள் இந்தியாவின் பிரதமராக நீடிக்க கூடாது என தெரிவித்துள்ளார் யெச்சூரி. இதுதொடர்பாக கடிதத்தையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளார்.

டுவிட்டரில் நீக்கம்

டுவிட்டரில் நீக்கம்

ரேடார் குறித்த கருத்தை மோடி வெளியிட்டவுடன் பெரும் சர்ச்சை எழுந்ததால் அதை டுவிட்டரிலிருந்து அக்கட்சியினர் நீக்கிவிட்டனர். பிரதமரின் பேட்டி குறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில் ரேடார் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பிரதமருக்கு யாரும் விளக்கவில்லையா. இது சிரிப்பதற்கான விஷயம் அல்ல, தேசத்தின் பாதுகாப்பு தொடர்புடையது என விமர்சனம் செய்துள்ளது.

English summary
Sitaram Yechury says that Modi's ridiculous comments on radars, clouds and fighter jets have been deservedly mocked but the EC needs to act against him for invoking armed forces hours before the sixth phase of voting. Letter to EC asking for prompt and strict action on this flagrant violation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X