ட்விஸ்ட்.. மத்திய அமைச்சரவையில் 2 பேர் நீக்கம்.. ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூருக்கு இடமில்லை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்த ஸ்மிருதி இரானி மற்றும் அனுராக் தாக்கூர் இருவரும் நரேந்திர மோடி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக இன்று இரவு பதவியேற்க உள்ளார். தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சிமைக்கிறது. இந்த நிலையில் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

Narendra Modi oath ceremony BJP NDA cabinet ministers

அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் இருந்தது. இதனால் கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சிலரின் பதவி பறிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நரேந்திர மோடி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது தேநீர் விருந்தில் கலந்து கொண்டவர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் பங்கேற்றுள்ளார். நீலகிரி லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் தோல்வியடைந்த போதும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. அதேபோல் கடந்த ஆட்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர், மோடி அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.

லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்ற போது, மத்திய அமைச்சரவையில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் கடந்த ஆட்சியில் மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானியும் மோடி அளித்த தேநீர் விருந்திற்கு அழைக்கப்படவில்லை. இதன் மூலமாக ஸ்மிருதி இரானியும் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிஸோரி லால் 5,39,228 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். கடந்த முறை ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி இம்முறை அதே அமேதி தொகுதியில் 3,72,032 வாக்குகள் மட்டுமே பெற்று 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாஜகவின் இரு நட்சத்திர நிர்வாகிகள் மத்திய அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+