மாதவிடாய் என்பது குறைபாடு அல்ல.. எனவே ஊதியத்துடன் கூடிய லீவு அவசியமில்லை - ஸ்மிருதி இரானி
டெல்லி: மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி காரணமாக, குறிப்பிட்ட நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது. ஆனால், இப்படியான விடுப்பு அவசியமற்றது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
இந்தியா போன்ற பண்பாட்டு பாரம்பரியம் கொண்ட நாடுகளில் மாதவிடாய் குறித்த புரிதல்களை மக்களிடத்தில் விரிவுபடுத்த வேண்டியுள்ளது. மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க அரசு தரப்பில் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்று மாநிலங்களவையிலும் இந்தே கோரிக்கை பிரதிபலித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா இது குறித்து மத்திய அரசுக்கு கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என்று கூறியுள்ளார்.
அதாவது, "மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரிசெய்யக்கூடியவையே. பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என்று கூறியுள்ளார்.

மேலும், "மாதவிடாய் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் குறித்து ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மாதவிடாயை எதிர்கொள்ளும் சராசரி பெண்ணாக நான் இதை கூறுகிறேன்" என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இது தொடர்பான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், மத்திய அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications